திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : நூலாசிரியர் வெ.அரங்கராசன் உரை
திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : நூலாசிரியர் உரை ஞானப் பெருநூலாம் திருக்குறள் மேடை முழக்கமாக இல்லாமல், வாழ்வியல் வழக்கமாதல் வேண்டும். அந்த ஞானப் பெருநூல் ஞாலம் முழுதும் பரவும் வகை செய்தல் வேண்டும். திருக்குறளின் திருக்குரல் ஞாலம் முழுதும் ஓங்கி ஒலித்தல் வேண்டும். ஏனெனில், அது ஞாலப் பொதுமை நூல்; வாழ்வியல் பயன்பாட்டு நூல். இந்த அருநூல் குழந்தைகள், சிறுவர்கள், படித்தவர், படியாதவர், பாமரர் என்னும் எவ்வித வேறுபாடுகளோ மாறுபாடுகளோ இல்லாமல், ஞாலம் முழுதும் பரவுதல் வேண்டும், அதற்கு என்னென்ன…