அண்ணாவன்றோ? – அறந்தைத் திருமாறன்
வெடிக்கின்ற எரிமலையைப் பாய்ந்து சீறி விரிக்கின்ற நெடுநதியை நாளும் ஓயா(து) அடிக்கின்ற கடலையை மேகத் துள்ளே அலறுகின்ற இடியொலிகள் அனைத்தும் பேச்சில் வடிக்கின்ற ஆற்றலர்யார்? கருத்தை யள்ளி வழங்குகொடை வள்ளல் யார்? கொடுமை கண்டு துடிக்கின்ற உளத்தர்யார்? புரட்சியாளர் தொடருக்கே ஒளி விளக்காம் அண்ணா வன்றோ! குற்றால அருவியதின் குளிரும்; நல்ல குலைக்கனியின் சார்தந்த சுவையும்; நஞ்சை வற்றாத தஞ்சையதின் வளமும்; சேர வளநாட்டின் இயற்கையதின் செழிப்பும்; என்றும் முற்றாத செந்தமிழின் இளமையெல்லாம் முழுவடிவாய்ப் பேச்சாலும் செயலால் அன்பால் உற்றாரப் பெருக்கெடுக்கத் தேக்கும் தோன்றல்!…