‘தருமம்’ தமிழே! -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
‘தருமம்’ தமிழே! –இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப் பலர் எண்ணுகின்றனர். நான் அண்மையில் பார்த்த காணொளி ஒன்றில், பேரா.சுப.வீரபாண்டியன், தருமமும் அறமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்கிறார். இதுபோல் தருமமும் அறமும் வெவ்வேறானவை. காலப்போக்கில் இரண்டும் ஒன்று எண்ணம் வளர்ந்து விட்டது. இவற்றைத்தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம். ‘தருமம்’ என்னும் சொல்லை ஒலிக்கையில் முதல் எழுத்தை (ந்)த என்பதுபோல் வலிந்து ஒலிப்பதால் இது தமிழ்ச்சொல் அல்ல என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. தருதல் என்பதன் அடிப்படையில், பயன்கருதாமல் பிறருக்குத்…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 3.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:2. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (திருக்குறள் 45) இல் வாழ்க்கை=இல்லற வாழ்க்கை, அன்பும்=அன்பையும், அறன்=அறனையும், உடைத்தாயின்= பெற்றிருக்குமாயின், பண்பும்=இல் வாழ்க்கைக்குரிய பண்பும், பயனும்=பயனுடைமையும், அது=அங்ஙனம் பெற்றிருத்தலாகும். அன்பு பரிமேலழகர், “தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பினை…
குருதிக்கொடை என்னும் அறம் – ப.கண்ணன்சேகர்
குருதிக்கொடை என்னும் அறம் நதிநீர் ஓட்டத்தால் நாடெலாம் செழித்திட நாளத்தின் குருதியால் நன்னுடல் தழைத்திடும்! அதிகாலைப் பயிற்சியால் ஆரோக்கியம் கண்டிட அழற்சியிலா உடலே அன்றாடம் உழைத்திடும்! விதியினை மாற்றியே வீழ்வதைத் தடுத்திட வெள்ளையோடு சிவப்பணு வேரெனக் காத்திடும்! நிதிபடைத்து நானிலத்தில் நிம்மதி காண்போரும் நிச்சயமாய்க் குருதியால் நலவாழ்வு வந்திடும்! உடல்முழுக்கப் பிராணத்தை உந்தும்நிலை செய்திட உதவுகிற பெரும்பணியே ஓடுகின்ற இரத்தமே! முடக்கிடும் கிருமிகளை முற்றிலும் அகற்றிட முதன்மைச் சேவகனாய் முயன்றிடும் இரத்தமே! திடமென இதயத் தெளிவான ஓட்டத்தை தினந்தோறும் தருவதும் தேகத்தில் இரத்தமே! மடமை…
திருக்குறள் உலகிற்குரியது – வ.சுப.மாணிக்கம்
செயலுக்கு வரும் அறம் கரைவது திருக்குறள்; மக்கள் வாழ வழிவகுப்பது திருக்குறள்; பல நிலை அறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்; உலகு ஒட்டும் நெறிகாட்டுவது திருக்குறள்; ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள்; செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும். செயலுக்கு வருமாறு சொல்ல வேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உள்ளத்தினர் அப்பெருமகன். ஆதலால்…
உலகில் “மறைநூல்” திருக்குறள் ஒன்றே! – ந.சேதுரகுநாதன்
உலகில் “மறைநூல்” திருக்குறள் ஒன்றே! பகைவரால் எய்யப்படுகின்ற அம்புகளும் எறியப்படுகின்ற ஈட்டிகளும் உடம்பிற் பாயாதவாறு, உடல் முழுதுந் தழுவிக் கிடந்து காக்கும் கவசத்தை ‘மெய்ம்மறை’ என்று வழங்குவது தமிழ்மரபு. மெய்யாகிய உடம்பினை மறைத்துக் காப்பதனால் மெய்ம்மறை எனப் பெயர் பெற்றது. கோட்டைச் சுவர்களாகிய அரண்கள் பகைவர் எய்கின்ற படைக்கலங்கள் வந்து பாயாதவாறு தடுத்துக் காத்தலால் ‘மறை’ என்ற பெயர் பெறும். அரண்போல நின்று காத்து உதவும் நூல் ‘ஆரணம்’ என்று கூறப் பெறும். மறை, வேதம் என்று பெயர் பெறும் நூல்கள் ‘ஆரணம்’…
மறச்செயல்களிலும் அற நெறி பேணிய முன்னோர்! – சொ.வினைதீர்த்தான்
ஒரு பதிவுக்காகப் பெரியபுராணத்தில் கண்ணப்ப நாயனார் சரித்திரத்திலுள்ள பாடல்களைப் படித்தேன். கீழ் வரும் பாடல் கவர்ந்தது; நம் முன்னோர் அறம் வியக்கவைத்தது. திண்ணன் என்று பெயரிடப்பட்ட வேடனாகிய கண்ணப்பர் தக்க பருவம் வந்ததும் வேடர்களுடன் முதல்முதலாக வேட்டைக்குச் செல்கிறார். மிருகங்களை வேட்டையாடுகிறார்கள். கொடிய மிருகங்களை எதிராக ஓடிச் சென்று எதிர்த்துக் கொலைசெய்கின்ற வேடர்கள் (கொடியனவெதிர் முடிகியுறு கொலைபுரி சிலை மறவோர்) வேட்டை நெறி முறைகளைக் கடைப்பிடிதனராம். 1.உடுக்கை போன்ற கால்களையும் மடிந்த மெல்லிய காதுகளையும் உடைய யானைக் கன்றுகள் மேல் வேட்டையைத்…