திருக்குறள் அறுசொல் உரை – 098. பெருமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 97.மானம் தொடர்ச்சி) திருக்குறள் 02. பொருள் பால் 13. குடி இயல் 098. பெருமை நல்ஒழுக்கக் கடைப்பிடியால் பணிவாக உள்ளத்துள் பெருகும் மகிழ்உணர்வு. ஒளிஒருவற்(கு), உள்ள வெறுக்கை; இளிஒருவற்(கு), ”அஃ(து)இறந்து வாழ்தும்” எனல். உள்ளத்துள் நிறையும் பெருமைதான் செல்வம்; அதுஇன்மை இழிவுதான். பிறப்(பு)ஒக்கும், எல்லா உயிர்க்கும்; சிறப்(பு)ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். பிறப்பால் வேறுபடார்; செய்தொழில் நுட்பத்தால், பெருமையால் வேறுபடுவார்….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 018. வெஃகாமை
(அதிகாரம் 017. அழுக்காறாமை தொடர்ச்சி) 01அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 018. வெஃகாமை எந்தக் காரணத்தாலும் பிறரது பொருள்களைப் பறிக்க விரும்பாமை. நடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக், குற்றமும் ஆங்கே தரும். பிறரது பொருளைப் பறிக்க விரும்பின், குடிகெடும்; குற்றம்மிகும். படுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார், நடுஅன்மை நாணு பவர் வருபயன் விரும்பிப், பழிப்புச் செயல்களை நடுநிலையார் செய்யார். சிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 017. அழுக்காறாமை
(அதிகாரம் 016. பொறை உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 017. அழுக்காறாமை பிறரது வளநலங்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளாத அறப்பண்பு.. ஒழுக்(கு)ஆ(று)ஆக் கொள்க, ஒருவன்,தன் நெஞ்சத்(து), அழுக்கா(று) இலாத இயல்பு. மனத்தாலும், பொறாமை இல்லாத, இயல்பை ஒழுக்கநெறியாக் கொள்க. விழுப்பேற்றின் அஃ(து)ஒப்ப(து) இல்லை,யார் மாட்டும், அழுக்காற்றின் அன்மை பெறின். யாரிடத்தும், பொறாமை கொள்ளாமையே, ஈ[டு]இல்லாத சிறப்புப் பே[று]ஆகும். …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 016. பொறை உடைமை
(அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 016. பொறை உடைமை பிறரது பிழைகளை — குற்றங்களைப் பொறுக்கும் பண்பைப் பெற்றிருத்தல். அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. தோண்டுவாரையும் தாங்கிக் காக்கும் நிலம்போல் இகழ்வாரையும் பொறுக்க. பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை மறத்தல், அதனினும் நன்று. வரம்பு கடந்த குற்றங்களையும் பொறுத்தலினும், மறத்தலே நன்று. …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 011. செய்ந்நன்றி அறிதல்
(அதிகாரம் 10. இனியவை கூறல் தொடர்ச்சி) 01 அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல் பிறரது நல்உதவிகளை மறவாமல், நன்றியராய் இருத்தலை அறிதல். செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும், வானகமும், ஆற்றல் அரிது. தான்செய்யாப் போதும், பிறர்செய் உதவிக்குப், பூமி,வான் ஈ[டு]ஆகா. காலத்தி னால்செய்த நன்றி, சிறி(து)எனினும், ஞாலத்தின் மாணப் பெரிது. காலத்தே செய்த நல்உதவி,…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 015. பிறன் இல் விழையாமை
(அதிகாரம் 014. ஒழுக்கம் உடைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை மற்றவன் மனைவியை, மனத்தால்கூட, முற்றும் விரும்பாத ஆளுமை. பிறன்பொருள்ஆள் பெட்(டு)ஒழுகும் பேதைமை, ஞாலத்(து), அறம்பொருள் கண்டார்கண் இல். பிறனது மனைவியை விரும்பும் அறியாமை, அறத்தாரிடம் இல்லை. அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். பிறனது இல்லாளை விரும்புவோன், அறத்தை மறந்த அறிவிலாதோன்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 013. அடக்கம் உடைமை
(அதிகாரம் 012. நடுவு நிலைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 013. அடக்கம் உடைமை ஐந்து புலன்களையும் அடக்கி, முந்து நல்வழியில் நடத்தல். அடக்கம், அமர்அருள் உய்க்கும்; அடங்காமை, ஆர்இருள் உய்த்து விடும். அடக்கம், அருளுக்குள் அமர்த்தும்; அடங்காமை, இருளுக்குள் செலுத்தும். காக்க பொருளாக, அடக்கத்தை; ஆக்கம், அதனின்ஊங்(கு) இல்லை உயிர்க்கு. உயிருக்கும், நலந்தரும் அடக்கத்தை, உயரிய பொருளாய்க் காக்க….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 012. நடுவு நிலைமை
(அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 012. நடுவு நிலைமை யாருடைய பக்கமும் சாயாமல், நேர்மையாக நடக்கும் சமநிலை. தகுதி எனஒன்று நன்றே, பகுதியால், பால்பட்[டு] ஒழுகப் பெறின். அவ்அப் பகுதியார்க்கு ஏற்ப நடக்கும் தகுதியே நடுநிலைமை. செப்பம் உடையவன் ஆக்கம், சிதை(வு)இன்றி, எச்சதிற்(கு) ஏமாப்(பு) உடைத்து. நடுநிலையார் வளநலம் வழிவழி வருவார்க்கும், பாதுகாப்பு…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 010. இனியவை கூறல்
(அதிகாரம் 009. விருந்து ஓம்பல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 010. இனியவை கூறல் கேட்பவர் மனமும் மகிழும்படி, இனியநல் சொற்களைக் கூறுதல். இன்சொலால், ஈரம் அளைஇப், படி(று)இலஆம், செம்பொருள் கண்டார்,வாய்ச் சொல். இரக்க[ம்உ]ள்ள, பொய்இல்லா இன்சொல், அறத்தை ஆராய்ந்தார் வாய்ச்சொல். அகன்அமர்ந்(து), ஈதலின் நன்றே, முகன்அமர்ந்(து), இன்சொலன் ஆகப் பெறின். மனம்மகிழ்ந்து ஈதலைவிட, முகம்மலர்ந்து இன்சொல்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 009. விருந்து ஓம்பல்
(அதிகாரம் 008. அன்பு உடைமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 009. விருந்து ஓம்பல் உறுபசியுடன் வருகின்ற எவருக்கும், விருந்து படைத்தலும் உதவுதலும். இருந்(து)ஓம்பி, இல்வாழ்வ(து) எல்லாம், விருந்(து)ஓம்பி, வேள்ஆண்மை செய்தல் பொருட்டு. இல்வாழ்தல், விருந்தினரைக் காக்கவும், நல்உதவி செய்யவுமே ஆகும். விருந்து புறத்த(து)ஆத், தான்உண்டல், சாவா மருந்(து)எனினும், வேண்டல்பாற்(று) அன்று. விருந்தாளர் வெளியில்; சாவினை நீக்கும்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 006. வாழ்க்கைத் துணை நலம்
(அதிகாரம் 005. இல்வாழ்க்கை தொடர்ச்சி) 001 அறத்துப் பால் 002 இல்லற இயல் அதிகாரம் 006. வாழ்க்கைத் துணை நலம் கணவர், மனைவியரது நல்பண்புகளும், இணைஇலாப் பெண்ணின் பெருமைகளும். மனைத்தக்க மாண்(பு)உடையள் ஆகித்,தன் கொண்டான் வளத்தக்காள், வாழ்க்கைத் துணை. மனைஅறத்தாள், கணவற்கு வளம்தரு தகுதியள்; நலம்சார் துணை. மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை, எனைமாட்சித்(து) ஆயினும் இல். இல்லப்பண்பு இல்லாளிடம் இல்எனின், மற்ற சிறப்புகளால்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 005. இல்வாழ்க்கை
(அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல் தொடர்ச்சி 001 அறத்துப் பால் 02 இல்லற இயல் அதிகாரம் 005. இல்வாழ்க்கை குடும்ப வாழ்க்கையின் கடமைகளும், அரும்பெரும் பொறுப்புக்களும், சிறப்புக்களும். இல்வாழ்வான் என்பான், இயல்(பு)உடைய மூவர்க்கும், நல்ஆற்றின் நின்ற துணை. பெற்றார், மனைவி, மக்களுக்கு, இல்வாழ்வான் நவவழித் துணைவன். துறந்தார்க்கும், துவ்வா தவர்க்கும், இறந்தார்க்கும், இல்வாழ்வான் என்பான் துணை. துறவியார், வறியார், ஆதரவிலார்க்கு, இல்வாழ்வான்…