திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 037. அவா அறுத்தல்
(அதிகாரம் 036. மெய் உணர்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 037. அவா அறுத்தல் பெரும்துன்பம் தருகின்ற பேராசைகளை, முழுமை யாகவே அறுத்[து]எறிதல். அவாஎன்ப, எல்லா உயிர்க்கும்,எஞ் ஞான்றும், தவாஅப் பிறப்(பு)ஈனும் வித்து. தொடரும் பேராசைதான், எல்லா உயிர்களின் பிறப்புகட்கும் விதை. வேண்டும்கால், வேண்டும் பிறவாமை; மற்(று)அது, வேண்டாமை வேண்ட வரும். விரும்பின், பிறவாமையை விரும்பு; விருப்புக்கெடின், இல்லை பிறப்பு. வேண்டாமை…