இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! – மெல்பேண் செயராமர்
இன்பவுலா இனித்தொடங்கப் போகிறது! கருங்கூந்தல் நிறைந்திருக்க கன்னமதில் குழிகள்விழ விளியிரண்டும் மீனெனவே வெண்மைநிற முகத்தினிலே மருண்டோடி பார்த்திருக்க வட்டநிலா வருவதுபோல் இடைஇருந்தும் தெரியாமல் அவள்வருவாள் நடைபயின்று அதைக்காண ஆவலுடன் அன்றாடம் காத்திருப்பேன் ! பலபேர்கள் வந்தாலும் பார்த்துவிடா என்பார்வை இவள்மட்டும் வந்தவுடன் எனைமீறிச் சென்றுவிடும் நினைவெல்லாம் அவளாக நிறைந்திருக்கும் காரணத்தால் அவள்வருகை மட்டுமெந்தன் அகத்தினுள்ளே புகுந்துவிடும் ! சிலவேளை அவள்பார்ப்பாள் பலவேளை நான்பார்ப்பேன் …