திருக்குறள் அறுசொல் உரை – 073. அவை அஞ்சாமை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 072. அவை அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 073. அவை அஞ்சாமை கூட்டத்தார் திறன்களை ஆராய்ந்து சற்றும் அஞ்சாது பேசும்திறன் வகைஅறிந்து வல்அவை வாய்சோரார், சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். தூயநல் சொல்அறிஞர் சொல்வல்லார் கூட்டத்தில் வாய்தவறாது பேசுவார். கற்றாருள் கற்றார் எனப்படுவர், கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். கற்றார் மனம்பதியச் சொல்வாரே கற்றாருள் கற்றார் எனப்படுவார். பகைஅகத்துச் சாவார், எளியர்; அரியர்,…