உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்! – பெ. சிவசுப்பிரமணியன்

உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்!    உலகெங்கும் அவரவர் தாய்மொழியே ஆட்சியிலும் கல்வியிலும் கோலோச்சுகின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள 49 நாடுகளிலும்கூட அந்நாடுகளின் தாய்மொழிகளே கோலோச்சுகின்றன; நம் மனத்தில் உருவகப்படுத்தப்பட்டதுபோல ஆங்கிலம் அல்ல. ஆங்கிலம் உலகம் முழுவதுமே காணப்படுகின்றது என்பதில் உண்மை இல்லை! இங்கிலாந்திலும்கூட 7 மொழிகள் கோலோச்சுகின்றன. அங்குள்ள மாநிலங்களின் தாய்மொழிகள் –  காட்டிசு(இசுகாத்துமொழி), ஐரீசு, வேலிசு, கார்னிசு, மாணக்சு, பிரெஞ்சு மொழிகளே ஆட்சி மொழியாக, கல்வி மொழியாகக் கோலோச்சுகின்றன. ஆங்கிலம் மத்திய அரசின் ஆட்சிமொழி நம் நாட்டில் இந்தி போல! (படிக்க…

ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மதுரைத்தமிழ்ச்சங்கம்குறித்துத் தவறான தகவலைச் சட்டமன்றத்தில் தெரிவித்த ச.ம.உ.தியாகராசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!   தமிழகச் சட்டமன்றத்தில்(ஆடி12, 2047/சூலை27, 2016) மதுரை மத்தியத்தொகுதி தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராசன் ஆங்கிலத்தில் பேசினார். அதற்குத் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் நிறுவனத் தலைவர், கருணாசு எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கான விளக்கம் தருவதாகச் சட்டமன்றத்திலும் ஊடகங்களிலும் பழனிவேல் தியாகராசன் தமிழால் முடியாது என்பதுபோல் தெரிவித்துள்ளது தமிழன்பர்களிடையே கோபக்கனலை எழுப்பியுள்ளது. தனக்கு எதிர்ப்பு மிகுந்ததும் தான் தெரிவித்ததைத் தானே மறுத்து மழுப்பியுள்ளார். ஊடகங்களில்…

நமக்குரிய மொழிக் கொள்கை – சி.இலக்குவனார்

நமக்குரிய மொழிக் கொள்கை            உரிமைநாட்டில் அந்நாட்டு மொழியே அந்நாட்டு மக்கள் கருத்தை அறிவிக்கும் கருவியாகப் பயன்படும். செருமன் நாட்டையோ ஆங்கில நாட்டையோ எடுத்துக் கொண்டால் அந்நாடுகளில் அந்நாட்டு மொழிகள்தாம் எல்லாவற்றுக்கும் என்பது யாவரும் அறிவர். ஆட்சித்துறை,  அரசியல் துறை, கல்வித்துறை, சமயத்துறை, பண்பாட்டுத்துறை முதலிய யாவற்றுக்கும் அந்நாட்டு மொழி ஒன்றேதான். ஆகவே தேசியமொழி, ஆட்சிமொழி, தொடர்பு மொழி, கல்விமொழி சமயமொழி, எல்லாம் ஒரே மொழிதான். ஆனால் இங்கு நமக்கோ தேசியமொழி, சமயமொழி, எல்லாம் வெவ்வேறாக அமைகின்றன.             தேசியமொழி இந்தியாம், ஆட்சிமொழி…

கியூபெக்கு மாகாணத் தாய்மொழிப்பற்று வெல்க!

 பிரெஞ்சு மொழிப் பயன்பாட்டை  மிகுவிக்க ஆங்கில அறிவிப்புப் பலகைகளை நீக்கச் சொன்ன கனடா அரசு ஒட்டாவா : கனடா நாட்டின், கியூபெக்கு மாகாண மருத்துவமனைகளில் உள்ள ஆங்கில அறிவிப்பு பலகைகளை நீக்குமாறு  அண்மையில் இந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கியூபெக்கு மாகாணத்தின்  ஆட்சி மொழி பிரெஞ்சு.  ஆங்கிலமும் அதிகார முறை மொழியாக உள்ளது.  எனினும்   பிரெஞ்சை பரப்பும் விதமாக இப்பகுதியிலுள்ள காசுபே நகரில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை நீக்க உத்தரவிட்டுள்ளது. ஐம்பது  விழுக்காட்டிற்கும் மிகுதியாக ஆங்கிலம் பேசுவோர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே பிரெஞ்சு மொழிப்…

மொழித் தூய்மை உலகோர் வேண்டுவது

  “தூய தமிழ் என்றால் இன்று எள்ளுவோர்களும் உளர். ஆங்கிலத்தைப் பார்” என்று அதன் கலப்புத் தன்மையைச் சுட்டிக் காட்டுவர். ஆங்கில மொழியின் வரலாற்றை அவர் அறியார். அங்கும் தூய ஆங்கிலம் வேண்டும் என்ற இயக்கம் தோன்றியுள்ளது. தூய ஆங்கில இயக்கம் (Society for Pure English) என்றே பெயரிட்டனர். அது 1913இல் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கியவர்கள் அந்நாட்டுப் பெரும் புலவர்கள். அதைத் தோற்றுவிக்க முதன்மையாய் இருந்தவர் அந்நாட்டு அரசவைப் புலவர்.   அதற்கு முன்பு அந்நாட்டில் வேற்றுமொழிச்சொற்களை ஆங்கில மொழியில் கலப்பதை வெறுக்கும் கொள்கை…

என்னடா தமிழா !- ஈரோடு இறைவன்

என்னடா தமிழா ! மூளை ஆங்கிலத்தில் கிடக்குது ! நாக்கு ஆங்கிலத்தில் கிடக்குது ! உன் எழுத்து ஆங்கிலத்தில் கிடக்குது ! என்னடா தமிழா உன் தமிழ் எங்கே கிடக்குது ! – ஈரோடு இறைவன்

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 6

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   3.9. பல்வேறு வகுப்பினரின் மன்பதைத் தொழிற்பாடுகள்:  ஒவ்வொருவரும் தத்தம் செயற்பாடுகளில் சிறந்து விளங்க எதிர்ப்பார்க்கப்பட்டனர்.  ஒருவர் தன் வாழ்க்கைப் பாதையில் வெற்றி காண்பதற்குத் தெரிவு செய்வதுவே அவரின் இலக்காகின்றது.  தொல்காப்பியர் பிறருக்கு இடையூறு இல்லாத வகையில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதே சிறந்தது என  குறிப்பிடுகின்றார். (நூற்பா 74,பொருள்). மன்பதை தொழில்முறையினால் 7 பகுப்பினைக் கொண்டிருந்தது. இவை அறிவர், அரசர், மக்கள், கற்றோர், கலைஞர்கள், மேற்கூறிய பகுப்புகளில் சேராத பிறர்  என்போர் ஆவார் (நூற்பா 75, பொருள்)….