தமிழக வேலை வாய்ப்பு ஆங்கிலேயருக்கு மட்டும்தானோ! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 16 – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழக வேலை வாய்ப்பு ஆங்கிலேயருக்கு மட்டும்தானோ! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15 – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் தொடரில் இப்பொழுது அறநிலையத்துறை குறித்துத்தான் தொடர்ந்து எழுதியிருக்க வேண்டும். எனினும் சில ஆணைகளும் அறிவிப்புகளும் ஆங்கிலத் திணிப்புகுறித்து எழுதத் தூண்டுகின்றன. ஏற்கெனவே இது குறித்துத் தெரிவித்தாயிற்றே! மீண்டும் தேவையா என எண்ணலாம். மீண்டும் மீண்டும் ஆங்கிலத் திணிப்பைத் தொடரும் போது நாமும் அது குறித்து மீண்டும் எழுதக் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா? சில நாள் முன்னர் தீயணைப்புத்துறை இயக்குநர் மாறுதலாணை, காத்திருப்பு ஆணை…