முதல்வர் பதவி விலகத், தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ
முதல்வர் பதவி விலகத் தடையை மீறி நாளை (21.8.)ஆர்ப்பாட்டம் . வைகோ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தி நாளை (21.8.17) சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்டுவதற்கு எந்த மறுப்பையும் தெரிவிக்காத தமிழக அரசைக் கண்டித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தியும் நாளை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் இசைவு வழங்கவில்லை…
“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” – கி. வேங்கடராமன்
“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் பேச்சு! “இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் பேசினார். “இந்திய அரசே! இனக்கொலை இலங்கைக்குத் துணை போவதை நிறுத்து! இலங்கையைக் கூண்டிலேற்றத் தீர்மானம் கொண்டு வா!” என்ற கோரிக்கையுடன், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், மாசி 21, 2048 – 05.03.2017 மாலை, சென்னை வள்ளுவர்…
அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்! – சுப.வீ.
அணிதிரள்வோம் ஆர்ப்பாட்டத்தில்! இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.).,பா. ச.க. முதலான சங்கப் பரிவாரங்களின் அடாவடித்தனமும், மிரட்டல்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன. அதன் ஒரு பகுதிதான் மூத்த இ.ஆ.ப. அதிகாரி கிருத்துதாசு காந்தியின் மீது ஏவி விடப்பட்ட வன்முறை மிரட்டல்கள். யாருக்கோ நிகழ்ந்த ஒன்று என எண்ணி நாம் கவலையற்று இருந்தால் அது நாளைக்கு நம் ஒவ்வொருவருக்கும் நடக்கக்கூடும். எனவே கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் தாண்டி,மதவாத வன்முறைகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய நேரமும், நெருக்கடியும் இப்போது வந்துள்ளது. எங்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கும், கிருத்துதாசு…
மருத்துவக்கல்லூரி பொதுநுழைவுத்தேர்வு – தி.மா.க.ஆர்ப்பாட்டம், சென்னை
சித்திரை 24, 2047 / மே 07, 2016 சனி காலை 11.00 திராவிடர் மாணவர் கழக ஆர்ப்பாட்டம் தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரை: கவிஞர் கலி .பூங்குன்றன் தொடக்கவுரை : கோ.கருணாநிதி
இயற்கைப் பயிருக்கான ஆர்ப்பாட்டம், சென்னை
மாசி 15, 2047 / பிப்.27, 2016 பிற்பகல் 3.00 இளைஞர்களின் எழுச்சித் தமிழகம்
தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழிஆக்கிடு! தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர்மாற்றம் செய்திடு! வழக்குரைஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிடுக! உயர்நீதிமன்றத்தில் உள்ள நடுவண் படையைத் திரும்பப் பெறு! சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில் தை 21, 2047 / பிப்.04, 2016 வியாழன் மாலை 3 30 மணி அளவில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உரிமையை நிலைநாட்ட தமிழர்களே திரண்டு வாரீர்! அழைக்கிறது தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தமிழ்த் தேச மக்கள் கட்சி தமிழ்மகன்…
தேவதானப்பட்டியில் பொதுவுடைமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இலாசர் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். திண்டுக்கலில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை ஆந்திராவைச்சேர்ந்த தனியார் நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு போதிய நிதியில்லாததால்…
நிலப்பறிப்புச் சட்டம் : தமிழக மக்கள் முன்னணியின் ஆர்ப்பாட்டம்
வைகாசி 12, 2046 / மே 30, 2015
புதுச்சேரியில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்தக்திற்கான ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம், கலைஇலக்கியப் பெருமன்றம்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து புரட்டாசி 4, 2045 / 20.09.2014புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் செய்தன. கவிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் திரளான தமிழார்வலர்கள் பங்கேற்றனர்.
தொடரி வேலைவழங்கு கழகம்(ஆர் ஆர் பி) – முற்றுகைப் போராட்டம்
அன்புடையீர்! நேற்று இலங்கையில்… இன்று இந்தியாவில்… தொடர்வண்டித் துறை வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பதைக் கண்டித்து தொடரி வேலைவழங்கு கழகம்(ஆர் ஆர் பி) – தேர்வு மையம் முற்றுகைப் போராட்டம் தொடர்பான துண்டறிக்கை இணைத்துள்ளேன். பார்க்க.. படிக்க.. பரப்புக… ப.வேலுமணி 9710854760
தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்
தமிழ்நாடெங்கும், தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்பிற்கு எதிராகப்போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இவைபோல் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 400 ஆக்கும் மேற்பட்டோர் தளையிடப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். வைகாசி 14, 2045, மே 28, 2014 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தோழர் பெ.மணியரசன் தலைமை ஏற்க பல்வேறு காட்சித்தொடர்பியல் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தேச மக்கள் கட்சி சார்பில் பொது செயலாளர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர், செந்தமிழ்க்குமரன்…
இனப்படுகொலையாளன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
இனப்படுகொலைகாரன் பட்சேவை அழைப்பதற்காக, நரேந்திர(மோடி) தென்ஆசியநாட்டுத் தலைவர்களை அழைத்துத் தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டு தமிழர்களைச் சிறுமைப்படுத்தி விட்டார். இதற்கு உலகெங்கும் எதிர்ப்புகள் எழுந்தன. எடுத்துக்காட்டிற்காகச் சில ஆர்ப்பாட்டங்களின் ஒளிப்படங்கள்.