தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது? – மறைமலை இலக்குவனார்
தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது? தமிழ்ச்சொற்களெல்லாம் தேம்பித்தேம்பி அழுகின்றன. சொற்களுக்கும் பொருள்களுக்கும் சோடிப்பொருத்தம் பார்த்துச் சோடித்துவைத்த கவிஞர் மறைந்துவிட்டார். அவர் உருவாக்கிய கவிதைகளெல்லாமே காமதேனுக்கள். கேட்ட பொருளும் கேட்காத பொருளும் நினைக்கும் பொருளும் நினைக்காத பொருளும் வாரிவாரி வழங்கும் வள்ளற்பசுக்களாக அவர் படைத்த கவிதைகள் வரலாறு படைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தப் படிமச்சிற்பியின் படிமப்பட்டறை இழுத்து மூடப்பட்டுவிட்டதே! உயிர்த்துடிப்பு மிக்க படிமச்சிற்பங்களைப் படைத்து உலகெல்லாம் உலாவரச்செய்த அவருடைய ஆற்றலைக்கண்டு தேவலோகத்து மயன் தற்கொலை செய்த கதை பழங்கதை. அவர் மேடையேறிய கவியரங்குகளெல்லாமே இலக்கிய…