தமிழக வேலை வாய்ப்பு ஆங்கிலேயருக்கு மட்டும்தானோ! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்  16 – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக வேலை வாய்ப்பு ஆங்கிலேயருக்கு மட்டும்தானோ! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15 – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் தொடரில் இப்பொழுது அறநிலையத்துறை குறித்துத்தான் தொடர்ந்து எழுதியிருக்க வேண்டும். எனினும் சில ஆணைகளும் அறிவிப்புகளும் ஆங்கிலத் திணிப்புகுறித்து எழுதத் தூண்டுகின்றன. ஏற்கெனவே இது குறித்துத் தெரிவித்தாயிற்றே! மீண்டும் தேவையா என எண்ணலாம். மீண்டும் மீண்டும் ஆங்கிலத் திணிப்பைத் தொடரும் போது நாமும் அது குறித்து மீண்டும் எழுதக் கடமைப்பட்டுள்ளோம் அல்லவா? சில நாள் முன்னர் தீயணைப்புத்துறை இயக்குநர் மாறுதலாணை, காத்திருப்பு ஆணை…

சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது!

சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது! சென்னை விமான நிலையத்தில் நக்கீரன்  புலனாய்வு இதழாசிரியரும், மூத்த இதழளருமான  நக்கீரன் கோபால் எந்த ஆவணங்களும் இன்றிக் காவல் துறையினரால் தளையிடப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த  முறையீட்டின் அடிப்படையில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால் அடையாறு சரகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் என நக்கீரன் இதழ் கூறுகிறது. நக்கீரன் இதழில் பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான கட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து  முறையீடு அளித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. முதலில் அடையாறு…

இலங்கையைப் புறக்கணிப்போம்!- ஆளுநர் மாளிகை முற்றுகை

இலங்கையைப் புறக்கணிப்போம்!  இந்திய அரசே! அரசுறவு, பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு, என அனைத்திலும் இலங்கையைப் புறக்கணி!  மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 வெள்ளி காலை 10.00 மணி – ஆளுநர் மாளிகை  நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து… ஆளுநர் மாளிகை முற்றுகை… தலைமை: தோழர் தியாகு, ஆசிரியர், தமிழ்த் தேசம். ஒருங்கிணைப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். அனைவரும் வருக!!