(அதிகாரம்  085. புல்அறிவு ஆண்மை தொடர்ச்சி) 02. பொருள் பால்     12. துன்ப இயல் அதிகாரம்   086. இகல் வெறுப்பு, பகைமை, பேரிழப்பு துயரம்எனப் பெருக்கும் மனமாறுபாடு. இகல்என்ப .எல்லா உயிர்க்கும், பகல்என்னும்      பண்(பு)இன்மை பாரிக்கும் நோய்.       பிரிவுஎனும் தீப்பண்பை வளர்க்கும்        கொடிய நோய்தான் மனமாறுபாடு.   பகல்கருதிப் பற்றா செயினும், இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.      பிளவால் விரும்பாதன செய்வார்க்கும்,        மாறுபாட்டால், தீங்கு செய்யாதே.     இகல்என்னும் எவ்வநோய் நீக்கின், தவல்இல்லாத்…