(தோழர் தியாகு எழுதுகிறார் 249 : தமிழ்நாட்டில் ஏதிலியர் நெருக்கடி – தொடர்ச்சி) இசுலாமியச் சிறைப்பட்டோர் விடுதலை இனிய அன்பர்களே! ஆதிநாதன் குழு நோக்கம் என்ன? பயன் என்ன? திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுச் சிறைகளில் நீண்ட பல ஆண்டுகளாக அடைபட்டுள்ள இசுலாமியச் சிறைப்பட்டோரை விடுதலை செய்வோம்! இது சென்ற சட்டப் பேரவைத் தேர்தல் பரப்புரையின் போது திமுக தலைவர் மு.க. தாலின் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கொடுத்த வாக்குறுதி. “அப்பாவி முசுலிம் கைதிகள்” என்றே அவர் சொன்னார். இருபதாண்டுக்கு மேல் சிறையில் கிடந்த பின் அப்பாவியா…