சூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்? – புகழேந்தி தங்கராசு
(மு.க.தாலின் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை பிப்பிரவரி 19ஐ – தொடர்ச்சி) மு.க.தாலினும் பிப்பிரவரி 19-உம்! (2) சூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்? ‘பழையவற்றையெல்லாம் ஏன் கிளறுகிறீர்கள்’ – எனச் சண்டைக்கு வருகிறார்கள், பழைய நண்பர்கள் சிலர். உள்ளூர் அழைப்புக்கும் 25 காசு, வெளியூர் அழைப்புக்கும் 25 காசு என்கிற கட்டணக் குறைப்புத் திட்டத்தில் (Rate cutter) இணைந்து விட்டார்கள் போலிருக்கிறது… என்னை ஒரு சொல் சொல்ல விடாமல் மூச்சு விடாது பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூட இருந்தே குழி பறிப்பவர்களுக்கு மறப்போம் மன்னிப்போமெல்லாம் பொருந்தாது…