திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 063. இடுக்கண் அழியாமை
(அதிகாரம் 062. ஆள்வினை உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை துன்புறினும், மனம்கலங்காது, வென்று நின்று, இன்புற்று வாழும்திறன். இடுக்கண் வரும்கால், நகுக; அதனை, அடுத்(து)ஊர்வ(து), அஃ(து)ஒப்ப(து) இல். எத்துன்பம் வந்தாலும், இகழ்ந்து சிரித்தலே அத்துன்பத்தை வெல்லும்வழி. வெள்ளத்(து) அனைய இடும்பை, அறி(வு)உடையார், உள்ளத்தின் உள்ளக், கெடும். வெள்ளம் போன்ற பெரும்துயரும், சிந்தனை உறுதியால் சிதையும். இடும்பைக்(கு) இடும்பை, படுப்பர்; இடும்பைக்(கு) …