சாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்

சாதி எதிர்ப்பை நலிவாக்கவும் சாதி அமைப்பை வலுவாக்கவும் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் சாதிமுறை அமைப்பு இல்லை. எனவே தொல்காப்பியத்தில் சாதி குறித்த எவ்வகைக் குறிப்பும் காணப்படவில்லை. வடஇந்திய நாகரிகத்தையும்   பண்பாட்டையும் பின்பற்றிய காரணத்தினால் தமிழ்நாட்டில் படிப்படியாகச் சாதி அமைப்பு ஏற்பட்டது. முனிவர்களும் அறிஞர்களும் சாதி முறையை எதிர்த்தனர். தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்ட புலவரும், மெய்யியல் அறிஞருமான திருவள்ளுவர், சாதி அமைப்பை “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” “அந்தணர் என்போர் அறவோர் மற்றுஎவ்உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்” எனக் கண்டிக்கிறார்….

இழிவினை ஏற்படுத்தும் இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்

    சில நேரங்களில் இடைச்செருகல் மூலநூலின் பெருமையை மிகுவிக்கும். ஆனால் இங்கோ தொல்காப்பியத்தின் தொன்மையைக் குறைத்தும், தமிழருக்கு இழிவுபடுத்தியும் அமைந்துள்ளன. இவ்விடைச்செருகல்களால்தான் தொல்காப்பியத்தின் காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டு எனப் பிற்பட்டக் காலத்திற்குக் கொண்டு வரப்பட்டு தமிழர் பண்பாடும் நாகரிகமும் ஆரியப் பண்பாட்டிலிருந்தும் நாகரிகத்திலிருந்தும் உருவானதாகத் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன. – பேராசிரியர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும் (Tholkāppiyam in English with critical studies): பக்கம்21 தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

எண்ணெய் கலந்த நீர் போன்ற இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்

எண்ணெய் கலந்த நீர் போன்ற இடைச்செருகல்கள் தொல்காப்பியத்தின் கட்டமைப்பு நன்கு பின்னப்பட்ட கவின்கலை கூறுமிக்கத்தாக அமைந்துள்ளமையால் இவற்றின் கட்டமைப்பு அழகைச் சிதைக்காமல் மூலநூலில் எதையும் சேர்ப்பது என்பது உள்ளபடியே அரிதான செயலாகும். எனவே இக்கேள்விக்குரிய நூற்பாக்கள் தம்முடைய உண்மையான நிறத்திலேயே தோன்றுகின்றன. இவை எண்ணெயில் கலந்த நீராகத் தனித்து விளங்குகின்றன. – பேராசிரியர் சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்: (Tholkāppiyam in English with critical studies) பக்கம்20 தமிழாக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள்

  சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள்   மிகப்பழங்கால நூல்களில் இடைச்செருகல்கள் ஏற்படுவது மிக இயல்பான ஒன்றாகும். கி.மு.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியத்திலும் இவ்வாறே ஏற்பட்டுள்ளது. குறும்புக்காரர்களின் கைகள் இதனைத் தொடாமல் விட்டு வைக்கவில்லை. எழுத்து அதிகாரமும் சொல் அதிகாரமும் தொகுப்பாக அமைந்து ஒவ்வொரு இயலின் பொருண்மையும் நிரல் பட அமைந்து நூற்பாக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து விளங்குகிறது. இவ்விரண்டும் மொழி குறித்த ஆய்வாகும். இடைச்செருகல் ஏற்பட்ட இடைக்காலத்தில் மொழிக் கல்வியில் யாருக்கும் நாட்டம் இல்லை என்பது தோன்றுகிறது.   ஆனால் பொருள்…