இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் – வைகை அனிசு
இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள்! அரசு ஆவணங்கள் வெளியில் கடத்தப்படும் கண்டம்(அபாயம்) தேனிமாவட்டத்தில் இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் இயங்கிவருவதால் அரசு அதிகாரிகள் யார், இடைத்தரகர்கள் யார் எனப் புரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர். தேவதானப்பட்டியில் செயல்படும் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தற்காலிகமாகத் திறன் குறைந்த தொழிலாளர்களை அமர்த்திப் பயன்படுத்துகின்றனர். அரசு அலுவலகங்களில் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள் வெளிஆட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். தேவதானப்பட்டி பாரதஅரசு வங்கியில் வெளியார்களும் ஓட்டுநர்களும் வங்கியினுள் உள்ளே உட்கார்ந்து…