தெய்வத்தரிசனம் இணையத் தளமாக வெளிவர உள்ளது

அன்பான வாசகர்களே!   உங்களின் தெய்வத்தரிசனம் விரைவில் இணையத் தளமாக வெளிவர உள்ளது. இது முழுவதும் இறைநெறியையே – ஆன்மிகத்தையே – கொண்டதாக இருக்கும். இது ஒரு தனி மனிதனின் தொகுப்பாக இல்லாமல் வாசகர்களின் குரலாகவே இயங்க உள்ளது. இந்த இணையத்தளத்தில் செய்திகளாக இருந்தாலும் சரி, விளம்பரங்களாக இருந்தாலும் சரி வாசகர்களின் பங்களிப்பையே விரும்புகிறது.   உங்கள் குலத்தெய்வக் கோயில்கள்பற்றிய தகவல்களையும், உங்களுக்குத் தெரிந்த இறைநெறித் தகவல்கள், கதைகள், கழுவாய்கள்(பரிகாரங்கள்), அற்புதங்கள்பற்றிய விளக்கமான செய்திகளையும் எழுத்து மூலமாகவோ, தட்டச்சு செய்தோ அனுப்பலாம். ஏதோ தகவல்களை…

இந்தியாவில் 32 இணையத்தளங்களுக்குத் தடை – மணி.மணிவண்ணன் கண்டனம்!

32 இணையத்தளங்களை இந்திய அரசு “தடை” செய்தது சரியா? நன்றி : http://www.bbc.co.uk/tamil/india/2015/01/150101_inidiawebsite.shtml இந்தியாவுக்குள் இணையச் சேவை வழங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 32 இணையதளங்களைத் தடை செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக, இணையத் தன்னுரிமைக்கான செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த இணையம் – சமூகத்திற்கான மையம் என்கிற இணையத் தன்னுரிமைக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பு இந்திய அரசு தடை செய்திருப்பதாக கூறப்படும் 32 இணையத்தளங்களின் பட்டியலை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது. அதில் பொதுமக்கள் பரவலாக பயன்படுத்தும் காணொளிகளுக்கான இணையத்தளங்கள் உள்ளிட்ட பல புகழ்வாய்ந்த…

ம.சோ.விக்டர் இணையத்தளம் தொடக்கம்

மொழியையும், வரலாற்றையும் அழித்துவிட்டால் இனத்தை அழித்துவிடலாம். ஈராயிரம் வருடங்களாகத் தமிழினம் சந்தித்துவரும் அவலம் இது. தமிழனின் கல்வெட்டு என் அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறது? பழங்கால ஓலைச்சுவடி ஏன் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படவில்லை? மொழித் திணிப்பு ஏன் செய்யப்படுகிறது? எழுத்துரு கலப்பு செய்யத் துடிப்பது ஏன்? நம் வரலாற்று ஆராய்ச்சி முடிவுகளையெல்லாம் வெளியிடாமல் தடுக்கும் சக்தி எது? இன்று நம் முன்னே நிற்கும் கேள்விகள் பல… இன்று நம் முன் இருக்கும் முதன்மையான கேள்வி மொழியறிஞர்களையும், வரலாற்று அறிஞர் பெருமக்களையும் நாம் கொண்டாடுகிறோமா? நாம் யாரையெல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்…

செங்கொடி ஊடகம் (செங்கொடிமீடியா டாட் காம்) புதிய இணையத் தளம்

கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்! செங்கொடி வெளியீட்டு நடுவத்தின், sengodimedia.com என்ற இணைய தளம் இன்று (7.6.2014) உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இணையப் பயன்பாடு, இணைய வழி வணிகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே  கொண்டே வருகிறது. இக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணையம் மூலம் ஒன்றிணைப்பதும்,  இணையவழி வணிகத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதும் இன்றியமை யாதது. இதனடிப்படையில், செங்கொடி வெளியீட்டு நடுவம் என்ற தயாரிப்பு நிறுவனம் sengodimedia.com என்ற இணையத் தளத்தை உருவாக்கி உள்ளது….