(ஊரும் பேரும் 55 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – திருவாக்கும் ஊர்ப் பெயரும் – தொடர்ச்சி) இதிகாசமும் ஊர்ப் பெயரும் பாரதமும் இராமாயணமும் திருவேட்களம் ஐவர் மலை லாடபுரம்இன்றும், லாடபுரம் என்னும் ஊரைக் குறித்து ஒரு கதை வழங்குகின்றது. அவ்வூரின் ஆதிப் பெயர் விராடபுரம் என்றும், பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்தபோது அவரை ஆதரித்த விராட மன்னனுக்குரியது அவ்வூர் என்றும் கருதப்படுகின்றன. அங்குள்ள இடிந்த கோட்டையை அவன் அரண்மனையெனக் காட்டுகின்றார்கள். அப் பகுதியில் ஆடு, மேய்க்கும் இடையர்கள் இன்றும் அருச்சுனன் வில்லைச் சில வேளைகளில் காண்பதாகச்…