பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’ வேதனையுடன் விடை பெறுகிறது! – சு.குமணராசன்
பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’ வேதனையுடன் விடை பெறுகிறது! அன்புருவான எம் இனிய தமிழ் உறவுகளுக்கு, அன்பான வணக்கம். வாழ்த்துகள். ‘தமிழ் இலெமுரியா’ தன் தளிர் நடைப் பயணத்தில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து இன்று பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. எண்ணிப் பார்க்கையில் இதயம் பூத்துக் குலுங்குகின்றது. செய்தியும் செயலும் இனிக்கின்றது. அன்புடை அறம், போருடைப் புறம், ஈரடி அறிவு, நாலடி நலம், எட்டுத் தொகைக் காட்டும் கட்டுக்கடங்காக் கருத்துக் களஞ்சியம், பத்துப்பாட்டின் பரந்த நோக்கு என உலகையே வியக்க வைக்கும்…