“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3 – கி. வெங்கட்ராமன்
“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3 இந்திய அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டு, 1950-இல் செயலுக்கு வந்தபோது, “இறையாண்மையுள்ள சனநாயகக் குடியரசு’’ என்பதாகத்தான் இந்தியா வரையறுக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில், 1976 இறுதியில்தான் 42ஆவது திருத்தத்தின் மூலம் “இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற சோசலிச சனநாயகக் குடியரசு’’ என மாற்றப்பட்டது. ஆனால், இதே காலப்பகுதியில்தான் முசுலிம்கள் தில்லியில் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைப்பண்டவத்திற்கு(சிகிச்சைக்கு) ஆளாக்கப்பட்டார்கள். துர்க்மான்வாயிலில்(கேட்டில்) அவர்களது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போலியாக இதுபோன்ற பல்வேறு சட்டங்களை இந்திரா காந்தி பிறப்பித்தார். அவசரகால ஆட்சிக் காலத்தில் “கல்வி’’யும், “வனம்’’தொடர்பான…