இந்தி எதிர்ப்புச்சிறப்பிதழ் 01
இந்தித்திணிப்பு எதிர்ப்பு அல்லது இந்தி முதன்மை எதிர்ப்பு என்பனபோல் கூறாமல் ‘இந்தி எதிர்ப்பு’ என்றே கூற விரும்புகிறோம். ஏனெனில், இதுவரை நாம் அவ்வாறு அழைத்தும் கல்விமொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழி, ஆட்சிமொழி முதலான போர்வைகளில் இந்தி நம்மை இறுக்கிக் கொண்டே உள்ளது. இருப்பினும் அதை உணராமலும் அதில் இன்பங் கண்டும் நாம் தமிழுக்கு அழிவு தேடிக் கொண்டிருக்கிறோம். 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1967 இல் ஆட்சியை மாற்றியது. அப்பொழுது ஓட ஓட விரட்டப்பட்ட பேராயக் கட்சி இன்னும்…