ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 5/9 “இன்று தமிழ்நாட்டில் ’சமசுகிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, எதிலாவது, ஒற்றுமை – பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கு இந்த சமசுகிருதம் பயன்படுகிறதா? ” என்று கேட்டுத் தமிழ்நாட்டவரிடம் ஓர் எண்ணத்…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9 : பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9 பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் குறித்து நாவலர் நெடுஞ்செழியன், “மதியின் கண் மறு இருப்பது போல, பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப் பற்றும், வைணவச் சமயப் பற்றும், வருணாச்சிரம சனாதனதருமப் பற்றும் சார்ந்த கருத்துகள், வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும் பொது அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால், உரையின் சிற்சில பகுதிகளில், வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்ற என்பது மட்டும்உண்மை. மேற்கண்ட காரணம் பற்றித்தான்…
நமக்குரிய மொழிக் கொள்கை – சி.இலக்குவனார்
நமக்குரிய மொழிக் கொள்கை உரிமைநாட்டில் அந்நாட்டு மொழியே அந்நாட்டு மக்கள் கருத்தை அறிவிக்கும் கருவியாகப் பயன்படும். செருமன் நாட்டையோ ஆங்கில நாட்டையோ எடுத்துக் கொண்டால் அந்நாடுகளில் அந்நாட்டு மொழிகள்தாம் எல்லாவற்றுக்கும் என்பது யாவரும் அறிவர். ஆட்சித்துறை, அரசியல் துறை, கல்வித்துறை, சமயத்துறை, பண்பாட்டுத்துறை முதலிய யாவற்றுக்கும் அந்நாட்டு மொழி ஒன்றேதான். ஆகவே தேசியமொழி, ஆட்சிமொழி, தொடர்பு மொழி, கல்விமொழி சமயமொழி, எல்லாம் ஒரே மொழிதான். ஆனால் இங்கு நமக்கோ தேசியமொழி, சமயமொழி, எல்லாம் வெவ்வேறாக அமைகின்றன. தேசியமொழி இந்தியாம், ஆட்சிமொழி…
இந்திக்கு வால்பிடித்த ம.மொ.சி. – வாலாசா வல்லவன்
இந்திக்கு வால்பிடித்த ம.மொ.சி. 1955 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்தி மொழியை எப்படி எல்லாம் வளர்த்து எடுக்க வேண்டும் என்பதைக் கண்டறிய பி.சி.கெர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு இந்தியா முழுவதும் முழுவதும் சென்று கருத்துகளைக் கேட்டறிந்தது. மார்கழி 27, 1986 / 1956 சனவரி 11ஆம் நாள் அக்குழு முன்பு ம.பொ.சி. கருத்துரைத்தார் இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்பதைத் தமிழரசு கழகம் ஏற்றுக் கொள்ளுகிறது. மத்திய அரசின் நிருவாக மொழியாகவும், மாநிலங்களின் தொடர்பு மொழியாகவும், உச்ச…
“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3 – கி. வெங்கட்ராமன்
“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 2/3 இந்திய அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டு, 1950-இல் செயலுக்கு வந்தபோது, “இறையாண்மையுள்ள சனநாயகக் குடியரசு’’ என்பதாகத்தான் இந்தியா வரையறுக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில், 1976 இறுதியில்தான் 42ஆவது திருத்தத்தின் மூலம் “இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற சோசலிச சனநாயகக் குடியரசு’’ என மாற்றப்பட்டது. ஆனால், இதே காலப்பகுதியில்தான் முசுலிம்கள் தில்லியில் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைப்பண்டவத்திற்கு(சிகிச்சைக்கு) ஆளாக்கப்பட்டார்கள். துர்க்மான்வாயிலில்(கேட்டில்) அவர்களது வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போலியாக இதுபோன்ற பல்வேறு சட்டங்களை இந்திரா காந்தி பிறப்பித்தார். அவசரகால ஆட்சிக் காலத்தில் “கல்வி’’யும், “வனம்’’தொடர்பான…
என்று தமிழ்..? – புதுவைத் தமிழ்நெஞ்சன்
இந்தியினை எதிர்க்கின்றோம் அறுபதாண்டாய் என்கின்றீர் ஏற்றமென்ன தமிழுக்குச் செய்துவிட்டீர்? வந்த இந்தி ஆங்கிலத்தால் சொந்தத் தமிழ் தானழியும் வடுநீக்க வழியென்ன கண்டு விட்டீர்? எந்த மொழி வளமளிக்கும் என்றெண்ணிப் படிக்கின்றீர் எம்தமிழை அதனாலே அழித்து விட்டீர் செந்தமிழைக் காப்பதற்குப் பிறமொழிகள் பிணிநீக்கிச் செந்தமிழில் கல்வியினைக் கற்கவேண்டும் எதிர்க்கின்றோம் இந்தியினை என்றுசொன்னால் இந்நாள்மட்டும் எம்தமிழை மீட்பதற்கு என்ன செய்தீர்? எதிர்ப்பதொன்றே கொள்கையாக எண்ணாமல் இன்பத் தமிழ் எம்நாட்டில் விளைவதற்கு வழியும் செய்வீர்! கதிரொளியால் மறைந்தோடும் காலைப்பனி போலயிங்குக் கனித்தமிழில் கற்றாலே கசப்பு மாறும் கதிர்மணியை நிலமேற்கும்…
தமிழை மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்! – பாவேந்தர் பாரதிதாசன்
இரகசியச்சொல் ஏடா தூதா இங்குவா தனியே என்உதடு நின்செவி இரண்டையும் ஒன்றுசேர் இரகசி யச்சொல் இயம்பு கின்றேன் உற்றுக் கவனி; உயர்ந்த செய்தி இறந்தது வடமொழி என்று தமிழர் இயம்பி வந்த துண்டா இல்லையா? இறந்தது மெய்தான் என்னும் தமிழர் இப்படிச் சொன்ன துண்டா? ஆமாம்! மெய்யை எதற்கு விளம்பினார் தமிழர்? வடமொழி இறந்த தென்றதால் தமிழை மாய்த்திட வந்தனர் வடமொழிக் குரியவர்! வீணை ஒலிக்கெதிர் வேண்டா அழுகைபோல் கருங்குயில் இசைக்கெதிர் கழுதைகத் தல்போல் நங்கையர் மொழிக்கெதிர் நரியின் ஊளைபோல் இன் தமிழ்ப் பயிற்சிக்…
இந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி கிடையாது! – வைகோ
இலக்கண இலக்கிய வளமே இல்லாத இந்தி மொழிக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி அறவே கிடையாது! – வைகோ அறிக்கை பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திய அரசியல் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளானால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு நிலைக்கும். உலகத்தின் மூத்த உயர் தனிச் செம்மொழியான தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்கப்படும் தகுதி…
இந்திக் கள்ளிப்பால் ஊற்றுதல் கட்டாயமாம்! – பாரதிதாசன்
இந்தியா கட்டாயம்? – பாரதிதாசன் தமிழ், அன்னைக்குச் சோறில்லை எம்மிடத்தில் — இந்தி அனைக்குத் தீனியும் கட்டாயமாம் சின்னபிள் ளைக்குத்தாய்ப் பாலினொடும் — இந்தத் தீநஞ்சை ஊட்டுதல் கட்டாயமாம். கல்லாமை என்னுமோர் கண்ணோய்க்கே — இந்திக் கள்ளிப்பால் ஊற்றுதல் கட்டாயமாம். இல்லாமை என்னுமோர் தொல்லைக்குமேல் — இந்தி இருட்டில் வீழ்வது கட்டாயமாம். அம்மா எனத்தாவும் கைக்குழந்தை — இந்தி அம்மியில் முட்டுதல் காட்டாயமாம். இம்மா நிலத்தினில் கல்வித்திட்டம் — இவ்வா றிட்டதோர் முட்டாளைக் கண்டதில்லை. தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர் — பெறத் தக்கதொர் கட்டாயம்…
செந்தமிழ் நாட்டிலே இந்தியா நன்று? – பாவேந்தர் பாரதிதாசன்
தமிழை ஒழிப்பவன் உலகினில் இல்லை தமிழை எதிர்த்தவன் வாழ்ந்ததும் இல்லை (தமிழை) தமிழை ஒழிக்க இந்தியை நுழைப்பவர் தம்வர லாற்றுக்கு மாசி ழைப்பவர் (தமிழை) இன்பத் தமிழ்மொழி உலக முதன்மொழி! இந்தி மொழியோ ஒழுங்கிலா இழிமொழி! என்ன போயினும் தமிழர்க்குத் தமிழ்மொழி இன்னுயிர் ஆகும் வாழ்க தமிழ்மொழி (தமிழை) ஒருமொழி ஓரினம் கொண்டதோர் நாடு பிறன் அதில் அடிவைக்க நினைப்பதும் கேடு பெருமொழி அழித்தும் பேரினம் அழித்தும் பெறுவது நாடன்று தன்பிண மேடு (தமிழை) தீதுற ஆள்வதோர் ஆட்சியே அன்று செந்தமிழ் நாட்டிலே இந்தியா…
மாற்றம்! – கவிக்கோ ஞானச்செல்வன்
ஞாலம் தோன்றிய நாள்முதலாய் நடந்தன நடப்பன மாற்றங்கள்! காலம் ஓடும் வேகத்தில் கழிந்தன புகுந்தன எத்தனையோ! மேலாம் வளர்ச்சி மாற்றமின்றி மேவுதல் என்பது முயற்கொம்பே! சாலவும் எல்லாம் மாறிடினும் சால்பும் அறமும் மாறாவே! நங்கை ஒருத்தி தன்மனத்துள் நல்லிளஞ் சிங்கம் ஒருவனையே தங்கும் அன்புக் கணவனெனத் தாங்கிய பின்னை மாற்றுவளோ? அங்கம் குழைந்தே அழதழுதே ஆண்டவன் அடிசேர் அடியார்கள் பங்கம் நேரத் தம்மனத்தைப் பாரில் என்றும் மாற்றுவரோ? அறிவியல் வளர்ந்த காரணத்தால் அடைந்தன பற்பல மாற்றங்கள்! பொறிகள் தம்புலன் மாற்றியொரு புதுமை தன்னைச் செய்ததுண்டோ?…
மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் – வைகோ
இந்தி, சமக்கிருத மொழிகளைத் திணிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் “தமிழ்நாட்டில் 47 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் இருமொழி திட்டத்தை மாற்றி மும்மொழி திட்டத்தை செயற்படுத்த செயலலிதா அரசு முயல்வது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். பள்ளிகளில் மீண்டும் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் முயற்சியில் அதிமுக அரசு ஈடுபட்டால் மீண்டும் 1965 மொழிப்புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்” என வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி- பயிற்சி…