வட்டுக்கோட்டை இந்து  இளைஞர்  சங்கத்தினர்  மாணவர்களுக்கு  மிதி வண்டிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து  இளைஞர்  சங்கத்தினர்  மாணவர்களுக்கு  மிதி வண்டிகள் அன்பளிப்பு   வட்டுக்கோட்டை இந்து இளைஞர் (வாலிபர்) சங்கத்தினால் வட்டு மத்திய கல்லூரி நவாலி அமெரிக்கன்  அறக்கட்டளைப்(மிசன்) பாடசாலை மற்றும்  யாழ்ப்பாணக்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகளுக்குச் சங்கத் தலைமைச்செயலகத்தில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.   மேற்படி விண்ணப்பம் கடந்த காலப் போரின் போது தந்தை காணாமல் ஆக்கப்பட்ட தாய் தந்தை இருவரையும் இழந்த, தந்தையினால் கைவிடப்பட்ட மூன்று மாணவிகளுக்குப் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் சமூகநல அலுவலர் மூலமும் எமது சங்கத்திடம் கடிதம் மூலம் தெரிவிக்கபட்டதைத் தொடர்ந்து…

இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை

இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை      குளிர் காலத்தை முன்னிட்டு இனிய வாழ்வு இல்லச் சிறார்களுக்குக் கம்பளி ஆடைகள் தந்துதவுமாறு  அதன் பொறுப்பாளர்கள் வேண்டினர்.  வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உரூ.38300 பெறுமதியான 50 கம்பளி ஆடைகள் கார்த்திகை 18, 2047 /  3.12.2016 சனிக்கிழமை இனிய வாழ்வு இல்லச் சிறார்களிடம் கையளிக்கப்பட்டன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] athangav@sympatico.ca

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இரண்டு மிதிவண்டிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இரண்டு  மிதிவண்டிகள் அன்பளிப்பு  எமது புலம்பெயர் உறவான  இலண்டன்  மாநகரைச் சேர்ந்த  சந்தியா, தன் 12 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு  இரண்டு மாணவிகளுக்குப் புதிய  மிதிவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார்.   மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின்  பரிந்துரையின் கீழ் வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்து வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்க முன்னாள் தலைவரும், கனடா கிளைச் சங்க முன்னாள் தலைவரும்…

வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தின் மருத்துவ உதவிகள்

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.   கடந்த காலப் போரின் போது தனது ஒரு காலினை இழந்து இருப்பதற்கு ஒழுங்கான வீடு இன்றிப் படுக்கைப் புண்ணுடன் அவதியுற்று வந்த கிளிநொச்சி மாவட்டம் இரணைமடு பாரதிபுரத்தைச் சேர்ந்த சந்தானம் சசிக்குமார் அவர்களுக்கு எமது புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த தி.இலக்சனா, நந்தனா ஆகியோரின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது தந்தை மருத்துவர் செ. திலகன் அவர்களின் நிதி அன்பளிப்பின் ஊடாக இவ் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.   இதன்…