திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3
(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2 தொடர்ச்சி) திருவள்ளுவர் : 3 தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். (263) நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவா நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலின். (கலி. நெய்தல்-8) களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும். (928) . . . . . . . . . காமம் மறையிறந்து மன்று படும். (1138) தோழிநாங், காணாமை யுண்ட கருங்கள்ளை…