‘இனி’ நூல் வெளியீட்டு விழா
திராவிட இயக்கத் தமிழர் பேரவை , கருஞ்சட்டைப் பதிப்பகம் இணைந்து நடத்தும் ‘இனி’ நூல் வெளியீட்டு விழா இன்று (17-03-2023 வெள்ளிக்கிழமை, பங்குனி 03, 2054) மாலை 6.30 மணி, சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற உள்ளது.இரா.உமா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தோழர் இரா.முத்தரசன், (மாநிலச் செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி), நக்கீரன் கோபால், (ஆசிரியர்-நக்கீரன்), இயக்குநர் கரு.பழனியப்பன், தோழர் அழகிய பெரியவன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.