(அதிகாரம் 031. வெகுளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல்   அதிகாரம் 032. இன்னா செய்யாமை   என்றும் எதற்காகவும் எங்கும் எவர்க்கும் எத்துயரும் செய்யாமை.   சிறப்(பு)ஈனும், செல்வம் பெறினும், பிறர்க்(கு)இன்னா      செய்யாமை, மா(சு)அற்றார் கோள்.          சிறப்பு தருசெல்வம் பெறுவதற்காக,          எவர்க்கும் எத்தீமையும் செய்யாதே.   கறுத்(து),இன்னா செய்தவக் கண்ணும், மறுத்(து),இன்னா      செய்யாமை, மா(சு)அற்றார் கோள்.           துன்பத்தைத் தந்தார்க்கும் துன்பத்தைத்        தராமையே தூயார்தம் கொள்கை.   செய்யாமல், செற்றார்க்கும், இன்னாத…