இன்னும் உறங்கிடும் ஞாபகமோ! – கவிஞர் அம்பாளடியாள்
முல்லைப்பூ வாடுமுன் வாரா யோ! செந்தமிழ் போற்றிடும் சேவக னே -உன்னைச் சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள் அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ! கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு கைவிர லாலெனை வென்றவ னே கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா கோடிச்சு கம்தரும் மோகன மே! என்னை ஈர்த்தவன் நெஞ்சினி லே – பொங்கும் இன்தமிழ்க் கற்பனைக் காவிய மே தன்னில் சரிபாதி என்றவ னே -உள்ளம் தஞ்சமென் றுன்னடி தேடுதிங் கே! தென்னை…