நூற்று ஐந்து அகவை கடந்த ப.அ.வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்!
நூற்று ஐந்து அகவை கடந்த ப.அ.வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்! பட்டுக்கோட்டை செங்கப்படுத்தான்காடு ஊரில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நண்பரும் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் ஊரில் வசித்து வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளருமான நூற்று ஐந்து வயது கடந்த பெரியவர் வைத்தியலிங்கம் அவர்கள் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். சிறுவயது முதலே பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட இவர் கடைசிவரை பெரியார் கொள்கைகளில் முழு ஈடுபாடும் சமூகத் தொண்டும் செய்து வாழ்ந்து வந்தார். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் குடும்பத்தோடு மிகுந்த நட்போடு…
சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் இயற்கை எய்தினார்!
சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் இயற்கை எய்தினார் திராவிட இயக்க வைர விழுது, தன்மானப் போராளி சு.இரா.இராமச்சந்திரனாரின் இளைய மகன் சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் (எ) சின்னத்தம்பி தம்முடைய 93ஆம் அகவையில் இன்று (தை 23, 2050 / 06.02.2019) வைகறை 2.15 மணிக்கு இயற்கை எய்தினார். ஏழை எளியவர்களுக்கு உதவி மகிழும் அவர் வாழும்பொழுதே தன் கண்களில் ஒன்றைத் தானமாகக் கொடுக்க மருத்துவர்களை நாடினார். வாழ்பவர் கண்ணைத் தானமாகப் பெறச் சட்டத்தில் இடமில்லை என மருத்துவர்கள் மறுத்து விட்டனர். பின் மறைவிற்குப் பின்னான கண் தான விருப்பத்தையும்…
எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்!
எமனுக்குத் தமிழ் கற்பிக்கச் சென்றார் தமிழறிஞர் மா. நன்னன்! திராவிட இயக்கத்தில் பற்றுக்கொண்ட தமிழறிவை எளியவருக்கும் புகட்டிய தமிழறிஞர் முனைவர் மா.நன்னன் அகவை முதிர்வால் தம் 94 ஆம் அகவையில் இயற்கை எய்தினார். [சில நினைவுகள்: அறிஞர் நன்னன் ஐயா அவர்களுடனான நினைவுகளில் சிலவற்றைப் பகிர விரும்புகின்றேன். அவர் தமிழ்வளர்ச்சி இயக்குநராக இருந்தபொழுது தமிழ்வளர்ச்சி இயக்ககத்தின் செயல்பாடின்மைபற்றி கருத்து தெரிவித்தேன். அதற்கு அவர், “நான் பெரியார்வழி வந்தவன். உங்கள் கருத்தைத் தமிழ் ஆர்வத்தில் எழுந்ததாக உணர்கிறேன். ஆனால், பிறர் அவ்வாறு எண்ணாமல்…