புகழுடல் எய்தினார் முத்துச்செல்வன் (எ) மீனாட்சிசுந்தரம்
பகுத்தறிவு முத்து முத்துச்செல்வன் (எ) மீனாட்சிசுந்தரம் மறைந்தார் பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர், 2009ஆம் ஆண்டு மேனாள் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்குக் காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவித், திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவர், பெங்களுரு இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், பெங்களுரில் வசிக்கும் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்தவர், பெரியார் அன்பர், சொற்பொழிவாளர், தமிழ்த்தொண்டர், தமிழறிஞர், மு….
புலமைப்பித்தன் மீளாத் துயில் கொண்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்
புலமைப்பித்தன் மீளாத் துயில் கொண்டார் தமிழ்த்தேசிய உணர்வாளரும் தமிழீழச் செயற்பாட்டாளரும் திரைப்படப்பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் (புரட்டாசி 20, 1966 /06.10.1935 – ஆவணி 23, 2052 / 08.09.2021)இன்று மீளாத்துயில் கொண்டார். கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் உயர்மிகு கருப்பண்ணன் – தெய்வானையம்மாள் இணையருக்குப் பிறந்தவர் இராமசாமி. ஒருமுறை இந்தி ஆசிரியர் ஒருவர், இவரைப் பைத்தியக்காரன் என விளையாட்டாகக் கூற, “ஆம்.நான் பைத்தியக்காரன்தான். தமிழ்மீது பைத்தியம் கொண்டவன்” எனச்சொல்லித் தன் பெயரைப் புலமைப்பித்தன் என மாற்றிக்கொண்டவர். பள்ளி இறுதி வகுப்பு முடித்த பின்னர் கோவை, சூலூரில்…
பேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்!
அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்!
அறிஞர் அறவாணனை அழைத்துக் கொண்டாள் இயற்கைத் தாய்! தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றி வந்த மேனாள் மனோன்மணியப்பல்கலைக்கழத் துண்வேந்தர் முனைவர் க.ப.அறவாணன், இன்று(மார்கழி 08, 2049 / 23.12.2018) காலை இயற்கை எய்தினார். நீரிழிவு நோயால் இடக்கால் பாதிப்புற்று நடக்க இயலாமல் இருந்தவர் நலம் பெற்று, 21 நாளில் நநன்றாக நடப்பார் என மருத்துவர் தந்த நம்பிக்கையில் குடும்பத்தினருக்கு உற்சாகம் தந்திருந்தார். ஆனால், நேற்று மாலை எதிர்பாராமல் மாரடைப்பு நேர்ந்து மருத்துமனையில் சேர்த்து இன்று வைகறைப்பொழுதில் 5.15 மணிக்கு அன்பர்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் மரணமுற்றார்….
அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! – இரவிக்குமார்
அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! தமிழறிஞர் அ.அ.மணவாளன் (ஆவணி 21, 1936 / 06.09.1935 – கார்த்திகை 14, 2049 / 30.11.2018) தமிழறிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் (1989-1996) சரசுவதி சம்மான் விருது பெற்றவருமான பேராசிரியர் அ.அ.மணவாளன் நேற்று (கார்த்திகை 14, 2049 / நவம்பர் 30) மறைந்தார். அண்மைக் காலமாக உடல் நலிவுற்று மருத்துவம் பெற்று வந்த அவர் பண்டுவம் பலனளிக்காமல் 30.11.2018 அன்று இரவு 8 மணிக்குக் காலமானார். அவருக்குத் திருமதி சரசுவதி என்ற மனைவியும்,…
எமனுலகு சென்றார் புரட்சித்தலைவி
எமனுலகு சென்றார் புரட்சித்தலைவி புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, காவிரி தந்த கலைச்செல்வி, எனப் பலவகையிலும், சிறப்பாக மக்களால் அம்மா என்றும் அழைக்கப்பெற்ற தமிழக முதல்வர் செ.செயலலிலதா காலமானார்(கார்த்திகை 20, 2047 / திசம்பர் 05, 2016 இரவு 11.30 மணி) வெற்றிகரமான தலைவியின் இறப்பால், இந்திய அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும் திறமை, துணிவு, தனித்துவம் மிக்க தலைவியை இழந்து தமிழ்நாடு தவிக்கின்றது என்றும் வலிமை மிக்க தலைவி யின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் பல வகையிலும் தலைவர்கள் இரங்கல்…
பொறியியல் கல்வியைப் பரவலாக்கிய முன்னோடி சேப்பியார் காலமானார்!
பொறியியல் கல்வியைப் பரவலாக்கிய முன்னோடி சேப்பியார் காலமானார்! சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தரும் பல கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் வணிக நிறுவனங்களின் உரிமையாளருமான சேப்பியார் என அறியப்பெறும் ஏசுஅடிமைபங்கிஇராசு உடல் நலக்குறைவால் ஆனி 04, 2047 / சூன் 18, 2016 சனி இரவு காலமானார். கல்விநிலையங்கள் வணிக நிறுவனங்களாக மாறிய அவலத் தொடக்தக்திற்குக் காரணமாக இருந்தாலும் ஏழை எளிய குடும்பங்களிலிருந்தும் பொறியாளர்கள் உருவாவதற்கு இவரே முதற் காரணம். புனிதர் சோசப்பு பொறியியல் கல்லூரி, சேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, சத்யபாமா…
நாட்டாரியல் பேராசிரியர் கரு.அழ.குணசேகரன் இயற்கை எய்தினார்
(சித்திரை 29, 1986 /12 மே 1955 – தை 06, 2047 / 17 சனவரி 2016) ஓய்ந்தது உரிமைக்குரல் நாட்டரியல் ஆய்வாளரும் நாட்டுப்புறக்கலைஞரும் நாடக ஆசிரியரும் நடிகரும் நாடகத்துறைப் பேராசிரியருமான முனைவர் உடல்நலக் குறைவால் இன்று தன் 60 ஆம் அகவையில் புதுச்சேரியில் கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கே.ஏ.குணசேகரன் என அழைக்கப்பெறும் இவர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர்; இளையான்குடி உயர்நிலைப்பள்ளி, இளையான்குடி முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை அரசு…
தேவதானப்பட்டியில் அப்துல்கலாமிற்கு இரங்கல் கூட்டம் – சிறப்புத்தொழுகை
தேவதானப்பட்டியில் முன்னாள் குடியரசு தலைவர் ஆ.ப.சை.அப்துல் கலாம் மறைவையொட்டி நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டது. கடைகளில் கருப்புக்கொடி கட்டப்பட்டுக் கடைகள் அடைக்கப்பட்டன; சட்டைகளில் கருப்புத்துணி அணிந்து துக்கத்தை வெளிப்படுத்தினர். அதன்பின்னர் தேவதானப்பட்டி முசுலிம் சமாஅத்து, வணிகர்கள் சங்கம், அனைத்துக் கட்சிமுன்னணியினர் காந்தித்திடலில் அமைதிவணக்கம் செலுத்தினார்கள். அஞ்சலிக்கூட்டத்தில் தேவதானப்பட்டி பேரூராட்சித்;துணைத்தலைவர் பி.ஆர்இராசேந்திரன், தேவதானப்பட்டி சமாஅத்துத் தலைவர் அப்துல் கபார்கான் முதலான பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஊர்வலமாகப் பள்ளிவாசலை வந்தடைந்தனர்.பள்ளிவாசலில் சிறப்புத்தொழுகையும், வழிபாடும் நிகழ்த்தப்பட்டன. இச்சிறப்பு வழிபாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பாப்புலர் பிரண்ட்டு ஆப் இந்தியா,…
சீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக!
மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…
பேராசிரியர் பழ. கண்ணப்பன் மறைவு
பேராசிரியர் பழ. கண்ணப்பன் அவர்கள் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் தனிய கணிதத்துறையில் (Pure Mathematics) 36 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்று இருந்தவர் பிப்பிரவரி 13 அன்று இயற்கை எய்திவிட்டார்கள். வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பணியில் சேர்ந்த முதலணித் தமிழர்களுள் ஒருவர்; வாட்டர்லூ வட்டாரப் பகுதியில் முதன்முதலாகத் தமிழ்ப்பள்ளி நடத்தியவர்களுள் ஒருவர்; பல இடங்களில் இருந்தும் தமிழார்வலர்களை அழைத்துக் கவியரங்கம் நடத்தியவர்; வாட்டர்லூ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்கள் மன்றத்தில் பொங்கல்விழா முதலானவற்றில் கலந்து அருமையான உரைகள் ஆற்றியவர். பேராசிரியர் குடும்பத்தில் அவரை இழந்து வாடும் மனைவி…