தமிழினத்திற்கு எதிரான வைரமுத்துவின் இரசினிகாந்த்திற்கான திரிபு வேலை
கவிதை உலகிலும் திரைப்பாடல் உலகிலும் வைரமுத்துவிற்கு எனத் தனி இடம் உள்ளதை மறுப்பதற்கில்லை. அவருக்குரிய செல்வாக்கிற்கு அவர் எப்பொழுதோ ஒரு முறை என்றில்லாமல் எப்போதுமே தமிழ்நாட்டின் காசி ஆனந்தனாக வலம் வந்து பாவேந்தர் பரம்பரை போன்ற புதிய பாவலர் பரம்பரையை உருவாக்க இயலும். ஆனால், பணத்திற்காகவும் தன் சொல்லாற்றலைக் காட்டவும், தமிழினத்திற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவரை, தமிழுக்காக வாழும் தகைமையாளர்போல் காட்டுவது பலரின் வருத்தத்திற்கும் உரியது. தன் தவறான செயலை அவரே பெருமைத் தொனியில் கோச்சடையான் பட விழாவில்…