இரசினி கட்சி தொடங்குவதை எதிர்ப்பது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்
இரசினி கட்சி தொடங்குவதை எதிர்ப்பது ஏன்? “புலி வருகிறது புலி வருகிறது” எனப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார் இரசினி. இப்பொழுது ”வாசலில் நிற்கிறது, நான் சொல்லும் பொழுது வரும்” என்பதுபோல் கட்சி தொடக்கம் குறித்து அறிவித்துள்ளார். இதற்கே ஆதரவு, எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன. சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் போட்டியிடப்போகும் அவர் கட்சியானது சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புவந்த்தும் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்ததும் முடிவெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்பு விரைவில் வந்தால், போதிய…