உ.வே.சா.வின் என் சரித்திரம் 77 : அத்தியாயம்-46 – தொடர்ச்சி
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 76 : இரட்டிப்பு இலாபம் – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-46 – தொடர்ச்சி “என்ன பாடம் ஆரம்பிக்கலாம்?” என்ற யோசனை எழுந்த போது சுப்பிரமணிய தேசிகர், “எல்லோருக்கும் ஒரே பாடத்தைச் சொல்லுவதைக் காட்டிலும் குமாரசாமித் தம்பிரான் முன்னமே சில நூல்களைப் பாடங் கேட்டிருத்தலால் அவருக்கு ஒரு பாடமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமும் நடத்தலாம். குமாரசாமித் தம்பிரானுக்குத் திருவானைக்காப் புராணத்தை ஆரம்பிக்கலாம்; மற்றவர்கள் சீகாளத்திப் புராணம் கேட்கட்டும்” என்று சொல்லி மேலும் பாட சம்பந்தமான சில விசயங்களைப் பேசினார். எனது…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 76 : இரட்டிப்பு இலாபம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 75 : அன்னபூரணி – தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-46 இரட்டிப்பு இலாபம் திருவாவடுதுறைப் பிரயாணம் நான் எதிர்பார்த்தபடியே விரைவில்ஏற்பட்டது. நான் மாயூரம் வந்து சேர்ந்த அடுத்த வாரமே பிள்ளையவர்கள்திருவாவடுதுறையை நோக்கிப் புறப்பட்டார்கள். நானும் சவேரிநாத பிள்ளையும்உடன் சென்றோம். சில ஏட்டுச் சுவடிகளும் எங்களுக்கு வேண்டியவத்திரங்களும் நாங்கள் எடுத்துக் கொண்டு போனவை. மாயூரம் எல்லையைத் தாண்டி வண்டி போய்க் கொண்டிருந்தது.“அம்பர்ப் புராணச் சுவடியை எடும்” என்று ஆசிரியர் கூறவே நான் அதனைஎடுத்துப் பிரித்தேன். “எழுத்தாணியை எடுத்துக் கொள்ளும்” என்று அவர்சொன்னார்….