திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா, கன்னியாகுமரி, 18.05.22
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகம் இன்று (வைகாசி 04, 2053 / மே 18, 2022) மாலை 6 மணி பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி, அமைச்சர் மனோ தங்கராசு, நாகர்கோவில் துணை மாநகரத் தலைவர் மேரி பிரின்சி இலதா வழக்கறிஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து பங்கேற்க உள்ளனர்.
தமிழர் எழுவருக்கான விடுதலைப் பேரணி, சென்னை : ஒளிப்படங்கள்
சென்னை எழும்பூரிலிருந்து கோட்டை வரையிலான எழுவர் விடுதலைப் பேரணி : ஒளிப்படங்கள் [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] முகிலன் பிரபாகரன் செகதீசுவரன் பிரசாந்து துறையூர் மயில் வாகனன் பரணிப்பாவலன் வாஞ்சிநாதன்
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்! – வைகோ
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்! – வைகோ இராசீவுகாந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். சனிக்கிழமை, இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இராசீவுகாந்தி கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முதலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வில் நடைபெற்றது. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், மரணத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர்த் தண்டனை குறைக்கப்பட்ட…