கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்!
கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்! வந்தவாசி. செப்.05. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலாவுக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பாகக் கல்விப்பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு அறிஞர் இராதாகிருட்டிணன் விருதினை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்தாண்டு செய்யாறு கல்வி மாவட்டத்தில் சிறப்பாகக் கல்விப்பணி ஆற்றிய ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருது, வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவரும் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. …