எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக! -இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி
எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக! உலகிலேயே மிகவும் கொடுமையானதாகச் சட்டப்படி விடுதலை செய்யப்பட வேண்டிய எழுவரைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதைக் கூறலாம். இதனால், இவர்களும் இவர்களின் குடும்பத்தினரும் துயரங்களில் உள்ளனர். எழுவர் தொடர்பில், சட்டம் பயின்ற மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த, சட்டப்பேரவைத் துணைத்தலைவராக இருந்த திருநாவுக்கரசர் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது கருணை காட்டுவது ஏற்புடையதல்ல என்று உளறியிருக்கிறார். நல்லவர்களுக்குக் கருணை காட்ட என்ன தேவை உள்ளது? குற்றம் புரிந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தானே கருணை காட்ட வேண்டும். ஆளுநருக்கு இது தொடர்பில் யாரும் அழுத்தம் கொடுக்கக்…
நல்ல தீர்ப்பு: இராசீவு கொலை அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம்.
இராசீவு கொலை: அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம். உச்சநீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு 21.05.1991 இல் நடைபெற்ற இராசீவு கொலையில் உண்மைக் குற்றவாளிகளைவிட்டு விட்டு அப்பாவிகளைத் தண்டித்துள்ளனர். இவர்கள் விடுதலைக்காகப் பல முயற்சிகள் மேற்கொண்டும் மத்திய அரசுகளின் சதியால் பயனற்றுப் போயிற்று. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை விண்ணப்பம் அனுப்பினர். இதில் முடிவெடுக்கக் காலத்தாழ்ச்சி ஆனதை முன்னிட்டு இவர்கள் தண்டனையை வாணாள் தண்டனையாக மாற்றி 2014இல் உச்ச நீதிமன்றம்…
எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்! இராசீவு கொலைவழக்கில் மாட்டிவைக்கப்பட்ட எழுவரும் மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். வலையை அறுத்து மீட்பார் யாருமில்லாமல் அவர்களின் துன்பம் நாளும் பெருகுகின்றது. தமிழக முதல்வரின் பேச்சு, சட்டமன்றத் தீர்மானம், போன்றவற்றால் இவர்கள் விடுதலைஆவார்கள் என்ற நம்பிக்கையும் தேவையற்ற அலுவலக நடைமுறைகளாலும் பாகுபாடு காட்டும் நீதிமன்றங்களின் நடைமுறைகளாலும் கானல்நீராகின்றது. இது தொடர்பான முதல்வரின் சொல்லும் அதிகாரிகளின் செயலும் ஒன்றாகும்வண்ணம் அரசின் போக்கு மாற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை துய்த்த…