இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10
(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5 தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் (தொடர்ச்சி) 6.எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலர் பண்புற இழைத்த பாத்தொகை எண்ணில வாய்வளந் தழைத்த முத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 7.ஞாயி றன்னசொல் நாவலர் வாய்ப்பிறந் தீயை வல்லோ ரிசையின் வளர்ந்துமுத் தூய சங்கத் திருந்த தொழுதகு தாயை நேர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 8.இனித்த பாலினுந் தேனினு மின்சுவைக் கலித்தொ கையினுங் கட்டிக் கரும்பினும் நினைத்த வாயுஞ்சொல் நெஞ்சு மினித்திடும் தனித்த மிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம். 9.கனைத்து…
இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5
(இராவணகாவியம் – கதைச்சுருக்கம் தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் 1.உலக மூமையா யுள்ளவக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி யின்றுநா னென்னு மொழிக்கெலாம் தலைமை யாந்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 2.பின்னர் வந்து பிறந்து செருக்கொடு முன்னர் வந்த மொழிபல வீயவும், இன்னு மன்ன விளமைய தாயுள தன்னி கர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 3.கன்ன டந்தெலுங் கந்துளு வம்புயல் மன்னி மேவு மணிமலை யாளமாம் பொன்னின் மேனி திரிந்து பொலிவறு தன்னை நேர் தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 4.மூவர் மன்னர் முறையொடு…