சித்தர்கள் கூறும் இரகசியங்கள் – சுந்தர அறிமுகம்
நீதிபதி தி.நெ.வள்ளிநாயகம் மேனாள் நீதியரசர் – உயர்நீதிமன்றம், கருநாடகா & சென்னை, நிறுவனர் – மனித உரிமைகள் குழு. ‘சீதாநெல்’, எண்.20 /28, கிருட்டிணா தெரு, தியாகராயநகர், சென்னை – 600 017. தொலைபேசி: 044-42606222 ; கைப்பேசி: 98404 99333 சுந்தரஅறிமுகம் ஞானத்திலே பல்வகை உண்டு என ஞானிகள் அன்று வகுத்தனர். அதிலே தலை சிறந்த ஞானம் கற்பூர ஞானம். (கற்பூர புத்தி என்று வழக்காடு மொழி வழங்கும்) அத்தகு ஞானம் நிறைந்தவன் பிறந்துவிட்டான் என்று முக்காலம் உணர்ந்த பெற்றோர்கள்…
சித்தர்கள் கூறும் இரகசியங்கள் -அணிந்துரை
டி.வி.வெங்கட்டராமன், இ.ஆ.ப., (ப.நி.), முன்னாள் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு அரசு. நூலாசிரியர், திருமூலர் அருளிய திருமந்திரம் – அனுபவ உரை. 6, (17), முதல் நிழற்சாலை, இந்திரா நகர், சென்னை – 600 020. தொலைபேசி: 044-24417705 அணிந்துரை அருமை நண்பர் இரா.கற்பூரசுந்தரபாண்டியன் அவர்களும் அவருடைய மனைவியார் திருமதி. சாந்தா அவர்களும் ‘சித்தர்கள் கூறும் இரகசியங்கள்’ என்ற தலைப்பில் வழங்கியுள்ள இந்த கட்டுரைத் தொகுப்பினை படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். சித்தர் இலக்கியத்திற்கு இந்தத் தம்பதியர் அளித்துள்ள படைப்பு ஒரு பெரும் பரிசாகும் என்று…
மலேசியாவில் கற்பூரசுந்தரபாண்டியன் இணையர் நூல் வெளியீடு
மலேசியாவில் கற்பூரசுந்தரபாண்டியன் இணையர் நூல் வெளியீடு அகில உலக ஆன்மிகமாநாடு 2017, மலேசியா நாட்டில் பத்துமலையில் வைகாசி 26 – 28, 2048 / 09.06.2017முதல்11.06.2017 வரை 3 நாள் நடைபெற்றது. வைகாசி 26, 2048 / 09.06.2017 அன்று நடைபெற்ற தொடக்க விழா,வில், பவானி சத்தியத்தின் சக்திநிலை சங்கத்தின் தலைவர் ஞான இராசாம்பாள், சித்தர் செம்மல் இரா.கற்பூரசுந்தரபாண்டியன், கல்வியாளர் சாந்தா பாண்டியன் இணையர் எழுதிய ‘சித்தர்கள் கூறும் இரகசியங்கள்‘ என்ற நூலை, வெளியிட்டார். சிங்கப்பூர் இராமகிருட்டிணா மடத்தின் தலைவர் தவத்திரு…
சிவகங்கை இராமச்சந்திரனார் நூல்வெளியீடும் நகைமுகன் படத்திறப்பும், சென்னை
வைகாசி 12, 2047 / மே 25, 2016 மாலை 6.00 பெரியார்திடல், சென்னை 600 007 கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்தினார் நூலின் சீர்பதிப்பு வெளியீடு இதழாளர் பொறி.க.நகைமுகன் படத்திறப்பு முன்னிலை : முனைவர் நாகநாதன் தலைமை : இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(ப.நி.) வெளியீட்டுரை: ஆசிரியர் கி.வீரமணி முதல்நூல் பெறுநர் : நீதிபதி பொன்.பாசுகர் நூலாசிரியர் உரை :கொடைக்கானல் காந்தி படத்திறப்பு : திரு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சிறப்புரை : திரு திருநாவுக்கரசர் ஆய்வுரை: பலர் பொறி.பன்னீர் இராமச்சந்தி்ரன் வழ.இரா.நீதிச்செல்வன்
ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே!
கார்த்திகை 10, 2046 / நவம்பர் 26, 2015 இல் பிறந்தநாள் காணும் ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே! சென்னை மாகாண மாநிலக்கல்லூரியில் பயின்று தமிழ் இளங்கலைப் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கங்கள் பெற்றுப் பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தமிழ்ப்பேராசரியராகப் பணியாற்றிப் பலரைக் கல்வி பயில ஆற்றுப்படுத்தியவர் அறிஞர் முத்துராமலிங்கம்; அப்பொழுதே பல கோடி மதிப்புள்ள 29 வகைச் சொத்துகள் இருப்பினும் அவற்றைப் பிறருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொண்டு உழைப்பிலும் கல்வியிலும் நாட்டம் கொண்டு கல்விப்பணியாற்றியவர். இவர்…
உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆதிரை பானுமதி
பேரா. முனைவர். ப. பானுமதி மலேசியாவில் நடைபெற்ற 9 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அரங்கத்தலைமை வகித்ததோடு “பெரிய புராணத்தில் பேசப்படாத பெண் புராணங்கள்” என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கினார். அரங்கத்தில் மேனாள் இந்திய ஆட்சிப் பணியாளர் கற்பூர சுந்தர பாண்டியன், முனைவர். வாணி அறிவாளன், முனைவர். திலகவதி ஆகியோர் ஆய்வுக்கட்டுரை வாசித்தனர். அரங்கத்தில் நீதியரசர் வள்ளிநாயகம், கவிவேந்தர் க. வேழவேந்தர், பேரா. இரா.மோகன், பேரா. நிர்மலா மோகன், இரா.மதிவாணன், கலைமாமணி சோபனா இரமேசு, சிங்கப்பூர் பதிப்பாளரும் பொறியாளருமான…