துணிவு இழந்தவனுக்குச் சுண்டுவிரல்கூட எதிரிதான்
துணிவு துணிந்தவனுக்குக் கடலின் ஆழம்கூட ஒரு சாண் வயிறு துணிவு இழந்தவனுக்கு மண்பானையின் ஆழம்கூட கடலின் ஆழம் என்பான்… துணிந்தவனுக்கு தலையெழுத்து ஒரு தடையில்லை.. துணிவு இழந்தவனுக்கு அவன் சுண்டுவிரல்கூட எதிரிதான் துணிந்தவனுக்கு ஒரு முறை மரணம்.. துணிவு இழந்தவனுக்கு நித்தம் நித்தம் மரணம்.. தவற்றைக் களையெடு சேமிப்பை விதைபோடு நீயும் துணிந்தவன்தான் வாழ்க்கையென்னும் பக்கத்தில் துணிந்தவன் வீழ்ந்தாலும் எழுவான்.. துணிவு இழந்தவன் எழுந்து எழுந்து வீழ்ந்துகிடப்பான்.. அகக்கண் திறங்கள் துணிவு பிறக்கும் புறக்கண் துறந்துவிடுங்கள்.. ஆக்கம் பிறக்கும்.. ஏன் என்ற கேள்வி பிறக்காவிடில் பிறக்காமலேயே இறந்துவிடுகிறது…
பிரிக்கும் ‘நான்’, பிணைக்கும் ‘நாம்’ – இரா.ந.செயராமன் ஆனந்தி
நான் நான் என்ற சொல் நாவினில் விதைக்காதீர் ! நாம் என்ற சொல் நாவினில் விதையுங்கள் ! நான் என்ற பாரம் தலைக்கு ஏற்றினால் வீழ்வது நாம் இல்லை ‘நீ’ என்பதை உலகம் இன்னும் உணரவில்லை ! நான் என்ற சொல் உதட்டைப் பிரிக்கும் பகைக்காரன் ! நாம் என்ற சொல் உதட்டை இணைக்கும் ஒற்றுமைக்காரன் ! நான் என்றால் மனிதர்களின் ஆங்காரம்! நாம் என்றால் மனிதன் அறிவின் அலங்காரம் நான் என்றால் உள்ளத்தின் அடையாளம் ! நாம் என்றால் ஒற்றுமையின் சின்னம்…