thanimaramum_thoappum

நான்  

நான்

என்ற சொல்

நாவினில் விதைக்காதீர் !

நாம்

என்ற சொல்

நாவினில் விதையுங்கள் !

நான் என்ற பாரம்

தலைக்கு ஏற்றினால்

வீழ்வது

நாம் இல்லை

‘நீ’ என்பதை உலகம்

இன்னும் உணரவில்லை !

நான் என்ற சொல்

உதட்டைப் பிரிக்கும்

பகைக்காரன் !

நாம் என்ற சொல்

உதட்டை இணைக்கும்

ஒற்றுமைக்காரன் !

நான் என்றால்

மனிதர்களின்

ஆங்காரம்!

நாம் என்றால்

மனிதன் அறிவின்

அலங்காரம்

நான் என்றால்

உள்ளத்தின் அடையாளம் !

நாம்  என்றால்

ஒற்றுமையின்

சின்னம் !

நான் என்றால்

இமைகள் கூட

பிரிந்து இருக்கும்  !

நாம் என்றால்

இமைகளும் அழகாய்

உறங்கும் !

நான் அடையாளம்

மனிதன் பிரிந்து கிடக்கிறான்

நாம் என்ற

அடையாளம்தான்

பட்சிகளின் ஒற்றுமையின்

சிகரமாய் விளங்குகிறது .

நான்  என்றால்

இல்லறம் கசக்கும் .

நாம் என்றால்

இல்லறம் இனிக்கும் .

நான் என்ற சொல்

குத்துப்பட்டு கிடக்கும்.

நாம் என்ற சொல்

அரவணைத்துக்கொண்டே

இருக்கும் .

நான் என்றால்

ஆலமரம் கூட வீழ்ந்திருக்கும் .

நாம் என்றதனால்தான்

மரம் செடி கொடி காய் கனி எனப்

பயிர் பெருகுகிறது.

 

-இரா.ந.செயராமன் ஆனந்தி 

கீழப்பெரம்பலூர் 

தரவு : முதுவை இதாயத்து