செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்
செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் முதலமைச்சர் செயலலிதாவின் நடைமுறைப்போக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அனைத்துத்தரப்பாராலும் பாராட்டத்தக்கனவாக உள்ளன. இந்நிலை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். முதல்வர் செயலலிதா பதவி யேற்பின் பொழுது வழக்கமான வெட்டுருக்கள் வழி நெடுக வீற்றிருக்கும் காட்சியைக்காண முடியவில்லை. கூட்டுப் பொறுப்பிலுள்ள அமைச்சராக இருந்தாலும் அடிமட்டத் தொண்டனாக இருந்தாலும் அடி வீழ்ந்து தெண்டனிடும் அடிமைத்தனம்தான் மேலோங்கியுள்ளது. இத்தகைய, தன்னலம் சார்ந்த போலித்தனமான பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி இட நாம் வேண்டியிருந்தோம். மக்களுக்குச் சிறிதும் விருப்பமில்லா…