அறநிலையத் துறையில் ஆற்ற வேண்டியவை-அ(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15)- இலக்குவனார் திருவள்ளுவன்
அறநிலையத் துறையில் ஆற்ற வேண்டியவை-அ (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 15) (அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 14) தொடர்ச்சி) கடந்த முறை “அறநிலையத் துறை தமிழுக்கு அறக்கேடு விளைவிக்கிறதே!” எனக் குறிப்பிட்டிருந்தோம். அறநிலையத்துறை ஆற்ற வேண்டிய அரும்பணிகள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம். முதலில் தமிழ் வழிபாட்டு நிலையைக் காண்போம். அறநிலையத்துறை யமைச்சர் சேகர்பாபு, மக்கள் மகிழும் வண்ணமும் முதல்வர் மு.க.தாலின் செயல் பாபு எனப் பாராட்டும் வண்ணமும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆதலின்…