இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 14

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 13 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் தொடர்ச்சி  வடமொழிச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகள்தாமும் அச் சொற்களை ஆடம்பரப் பொருளாகவும் அழகு தரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாக மதிப்பதில்லை.  ஆதலின் அவற்றை அறவே கைவிட்டு வாழவல்லவாம் என்பதை அவர்கள்-  கீழைநாட்டு மொழிநூல் அறிஞர்கள்  -அறிந்தவரல்லர். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தம்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு வடமொழிச் சொற்களை அளவுக்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை எதிர்நோக்கி எதிர்நோக்கிப் பழகிவிட்டன. ஆதலின்…

தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 – தி.வே. விசயலட்சுமி

தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2        பண்டைத் தமிழரின் விழுமிய வாழ்வு சிறந்த பண்பாட்டையும்  செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களையும் தோற்றுவித்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும். பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல்  தொல்காப்பியமாகும். தமிழுக்கும், தமிழினத்திற்கு முதனூல். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றியனவாகச் சில நூல்கள் இருப்பினும், அந்நூல்களைப்பற்றி நாம் ஒன்றும் அறியக் கூடவில்லை. இடைக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது.      தொல்காப்பியனார் குறித்த வரலாறுபற்றிப் பலசெய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச்…

அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! – கருமலைத்தமிழாழன்

அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! [தொல்காப்பியர்  சிலை  திறப்பு  விழா கவியரங்கம் இடம் –  காப்பிக்காடு (நாகர்கோவில்)   நாள்: 26.06.2047 10-07 -2016 தலைமை –  கவிஞர் குமரிச்செழியன்]   தமிழ்த்தாய்  வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும்             களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும்             இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும்             காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும்             வீழாத   தமிழன்னையை  …

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே! – அகத்தியர்

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே; எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே; எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்     அகத்தியர்: பேரகத்தியத் திரட்டு

வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே!

வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே!   ஒரு சொல் அதன் பொருளை வேறுபடுத்திக் காட்ட உதவுவன வேற்றுமை உருபுகளாகும். வேற்றுமை உருபுகளை நேரடியாகப் பயன்படுத்தும் பொழுதும் மறைமுகமாகப் பயன்படுத்தும் பொழுதும் வல்லின எழுத்துகள் மிகுந்து வருவது தமிழின் சிறப்பாகும். அவ்வாறு மிகுந்து வராவிடில் பொருளே மாறுபடும். எனினும் சிலர், அவ்வாறு எழுதத் தேவையில்லை; இயல்பாக எழுதலாம் எனத் தவறாகக் கூறி வருகின்றனர். “இலக்கணம் இல்லாச் செய்தி கரையற்ற ஆறு ஆகும்” என அறிஞர்கள் கூறுவதிலிருந்தே இலக்கணத்தின் சிறப்பை உணரலாம். இலக்கணத்தின் ஒரு கூறுதான்…

வடசொல் என்பது ஆரியம் மட்டுமல்ல! – ப.பத்மநாபன்

  தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் இரண்டாவது அதிகாரமாகிய சொல்லதிகாரத்தில் சொல்லினது இலக்கணத்தைக் கிளவியாக்கம் தொடங்கி எச்சவியல் ஈறாக ஒன்பது இயல்களில் விரித்துக் கூறுகிறார். இறுதி இயலாகிய எச்சவியலின் முதல் நூற்பாவில் தமிழ்மொழியில் செய்யுள் இயற்றப் பயன்படும் சொல்லைப் பற்றிக் கூறுகிறார்.. சொற்களின் தன்மைக்கேற்ப அவற்றைப் பெயர், வினை, இடை, உரி என நான்காக வகுத்த தொல்காப்பியர் சொற்கள் வழங்கும் இடத்தின் அடிப்படையில் நான்கு வகையாக அவற்றைப் பாகுபடுத்துகிறார். அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனக் கூறுகிறார். இயற்சொல் திரிசொல் திசைச்சொல்…

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு : நிறைவு – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு (ஏன் படிக்க வேண்டும்?)   முன்சொல்    16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த போர்த்துக்கீசியப் பாதிரி அன்றீக்கு அடிகளார் கிறித்துவ மதத்தைப் பரப்ப வேண்டி, தமிழகத்து முத்துக்குளித்துறைப் புன்னைக்காயலில் உள்ளூர் மக்களாகிய பரவரிடையே வாழ்ந்து அவர்கள் பேசிய தமிழைப் படித்தார். தாம் படித்த தமிழைப் பிற பாதிரிமாருக்குக் கற்பிக்கவேண்டி ஒரு கையேடு தயாரித்தார். அதுவே “மலபார் மொழிக் கருவி (Arte Da Lingua Malabar)” என்ற கையேடு….

சிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது

சிறப்புடைய மொழியின் இலக்கணம் தமிழுக்கே உரியது இயற்கை ஒலிகளையுடைய சுருங்கிய எழுத்துக்களை உடைமை. ஓரெழுத்து, ஈரெழுத்து, மூவெழுத்து சொற்களைப் பெருவாரியாக உடைத்தாயிருத்தல். சொல்லும் பொருளும் பருந்தும் நிழலும்போல் ஒற்றுமை உடைமை. தெளிந்த நடையையும், இனிய ஓசையையும், பா அமைதியையும் உடைமை. பகுதியும், அதனிற் தோன்றும் சொற்களும் மாறுபடாமை. காலம் இடம்தட்பவெப்பங்களால் மாறுபடாமை என்றும் அழியாப் புத்தழகு உடைமை. புது நூற்கள் யாத்தற்கு இயைபு உடைமை. பிறமொழிச் சொற்களை மொழி பெயர்த்தற்கு ஏற்ற திறன் உடைமை. பிறமொழி உதவியின்றி இயங்கும் ஆண்மையும், பலமொழிகளுக்குத் தாயாயிருக்கும் பெண்மையும்…

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!   ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)  மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு