தமிழ் வளர்த்த நகரங்கள் 8 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கிய மதுரை 2/2
(தமிழ் வளர்த்த நகரங்கள் 7 – அ. க. நவநீத கிருட்டிணன் : இலக்கிய மதுரை 1/2 தொடர்ச்சி) அத்தியாயம் 4. இலக்கிய மதுரை தொடர்ச்சி புதுப்புனல் விழா நடைபெறும் நன்னாளில் இத் துறைக்கண் குழலும் யாழும் முழவும் ஆகிய பல்வகை இன்னியங்கள் முழங்கும். அரசனால் தலைக்கோல் அரிவையென விருதுபெற்ற ஆடல் மகளிரும் பாடல் பாணரும் அத்துறையைச் சார்ந்த பொழிலிடத்தே ஆடல் நிகழ்த்துவர். நாடக மகளிரின் ஆடல் ஒலியும், இன்னியங்களின் பேரொலியும் கரையில் வந்து மோதும் வெள்ளத்தின் அலையொலியுடன் சேர்ந்து இடிமுழக்கம் போல் ஒலிக்கும்….
தமிழ் வளர்த்த நகரங்கள் 7 – அ. க. நவநீத கிருட்டிணன் : இலக்கிய மதுரை
(தமிழ் வளர்த்த நகரங்கள் 6 – அ. க. நவநீத கிருட்டிணன் : . மதுரையின் மாண்பு தொடர்ச்சி) அத்தியாயம் 4. இலக்கிய மதுரை மாங்குடி மருதனார் காட்டும் மதுரை தென்னகத்தின் தொன்னகரும் தமிழகத்தின் தலைநகருமாகிய மதுரையை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்கப் புலவர்கள் முதல் இற்றை நாள் புலவர்கள் ஈறாகப் பலரும் புகழ்ந்து பாடியுள்ளனர். மதுரை மாநகரின் மாண்பினை விரிவாக எடுத்து விளக்கும் இலக்கியங்களும் பலவுள, அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன மதுரைக்காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம், திருவிளையாடற்புராணம் என்னும் நான்கு நூல்களுமாகும். கடைச்சங்கத் தொகை…