பொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்!
ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.
(வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 – ஆடி 22, 2049 / ஆகத்து 07, 2018) தி.மு.க.வரலாற்றின் பெரும்பகுதியாகவும் தமிழக வரலாற்றின் சிறப்புப் பகுதியாகவும் இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்கும் ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி எண்ணம், சொல், எழுத்திற்கு ஓய்வுகொடுத்ததுடன் இயக்கத்திற்கும் ஓய்வு கொடுத்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கும் அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். துயரத்தில் பங்கேற்கும் அகரமுதல மின்னிதழ் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள் தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார்…
தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது
தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது இணையம் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றுநர்க்கு ‘அகரமுதல’ சார்பில் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் இணைந்து இலக்குவனார் விருது வழங்க உள்ளன. மரபுத்தமிழில் பாடல்கள் எழுத ஊக்குவித்தும் கற்பித்தும் எழுதியும் சிலர் முகநூல் குழுக்கள் அல்லது பிற தளங்கள் வழித் தொண்டாற்றி வருகிறார்கள். பிழையின்றி எழுதுவதற்கு வழிகாட்டி நல்ல தமிழை வளர்க்கச் சிலர் உறுதுணையாக உள்ளனர். மிகச்சிலர் பிழையின்றியும் அயற்சொல், அயலெழுத்து கலக்காமலும் நல்ல தமிழில் எழுதி வருகின்றனர். சிலர் தமிழ் வளர்ச்சிக்காக வலைப்பூ அல்லது இணையத்தளங்கள் நடத்தி வருகின்றனர். சிலர்,…
‘வள்ளுவர் கண்ட இல்லறம்’ – சி.இலக்குவனார் : 1. மீள்பதிப்புரை
‘வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை’ பதிப்புரை தமிழுக்கென வாழ்ந்த பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் குறிப்பிடத்தக்கப் பணிகளுள் ஒன்று குறள்நெறியைக் குவலயம் எங்கும் ஓங்கச் செய்ய வேண்டும் என்று பாடுபட்டது. ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்‘ எனத் தமிழ் உலகத்தவரால் அன்புடன் அழைக்கப் பெற்ற பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், மாணாக்கர்களிடம் கற்பிப்பதை மட்டும் தம் கடமையாகக் கொள்ளாமல், மக்களிடையேயும் சங்க இலக்கிய மாண்புகளையும் தொல்காப்பியச் சிறப்புகளையும் திருக்குறள் நெறிகளையும் விளக்குவதையும் பரப்புவதையும் தம் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்; இலக்கிய உலாக்களை அமைத்துக்…
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02– சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 01 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02– சி.இலக்குவனார் ஆ. பதிப்புரை & நன்றியுரை பதிப்புரை(2002) தமிழின் தொன்மைச் சிறப்பையும், முதன்மைச் சிறப்பையும், தமிழ் மக்களின் விழுமிய பண்பாட்டையும் உயரிய நாகரிகத்தையும் உலகுக்கு உணர்த்துவன சங்க இலக்கியங்களே! சங்க இலக்கியங்களை உலக ஆராய்ச்சியாளர்கள் அறிந்தால்தான் தமிழ் உலகமொழிகளின் தாய் என்பதை உணர்வர் என்பதை வலியுறுத்தி வந்தவர் பெரும் பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார். அறிஞர் கால்டுவல் …
நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~3/3 : இ.பு.ஞானப்பிரகாசன்
(நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3 தொடர்ச்சி) நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~3/3 எல்லாப் பூசைகளும் தமிழ்ப் பூசைகளே! அன்றைய நடுகல் கடவுள்களும் இன்றைய கோயில் கடவுள்களும் வேறல்ல என்பது மட்டுமில்லை, அந்த நடுகல் பூசை முறைக்கும் ஆகம முறைப்படி இன்று கோயில்களில் பிராமணர்கள் செய்யும் பூசை முறைக்கும் கூட ஏறத்தாழ வேறுபாடு என்பதே இல்லை! நடுகல்லாக இருந்தபொழுது ஆண்டுக்கு ஒருமுறையோ சிலமுறையோ மட்டும் அந்தக் கற்கடவுளை வணங்குவார்கள். அதனால், மாதக்கணக்கில் மழையிலும் வெயிலிலும் கிடந்து அழுக்கடைந்து போன…
நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3 – இ.பு.ஞானப்பிரகாசன்
(நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3 தொடர்ச்சி) நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~2/3 கடவுளைப் பூசிப்பதில் தமிழர்களுக்கே உரிய தனித்தகுதிகள்! “தமிழர்களுக்கு எனத் தனிச் சமயம் கிடையாது. இந்து சமயமே தமிழர் சமயம்! தமிழர்கள் இந்துக்களே! தமிழ்ச் சமயம் என்பதும் இந்து சமயத்தின் ஒரு பகுதியே!” என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள் இந்து சமய அடிப்படையாளர்கள். ஆனால், இந்து சமயத்துக்கும் தமிழர் சமயத்துக்கும் அடிப்படையிலேயே பெருத்த முரண்பாடு உண்டு! “கடவுள் என்பவர் அனைத்து வல்லமைகளும்…
நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3 – இ.பு.ஞானப்பிரகாசன்
நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்~1/3 கடவுளை நம்ப உலகில் உள்ள எல்லோருக்கும் உரிமை இருக்கும்பொழுது, அந்தக் கடவுளைப் பூசை செய்யவும் நம்புகிற எல்லோருக்கும் உரிமை இருப்பதுதானே முறை? ஆனால், இங்கு நடப்பது என்ன?… கடவுள் மீது அன்பு(பக்தி) செலுத்த எல்லாரும் வேண்டும்; அந்தக் கடவுளுக்குக் கோயில் கட்ட எல்லா சாதியினரும் வேண்டும்; உண்டியலில் காசு போட எல்லாத் தரப்பு மக்களும் வேண்டும்; ஆனால், கடவுளின் அறைக்குள் (கருவறை = அகநாழிகை) செல்லவும் தொட்டுப் பூசை செய்யவும் மட்டும் குறிப்பிட்ட சிலருக்குத்தான்…
தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன தமிழ்ப்பயிற்றுமொழியை வலியுறுத்தும் கட்சியினரும் அமைப்பினரும் தலைவர்களும் ஆர்வலர்களும் தங்கள் குடும்பத்தினரைத் தமிழ்வழிக் கல்விக்கூடங்களிலேயே சேர்க்க வேண்டும். தரமான தமிழ்வழிப்பள்ளிக்கூடம் இன்மையால் தமிழ்வழிக்கல்வி அளிக்க இயலவில்லை என்னும் குறைபாட்டைப் போக்கவேண்டும். எனவே, ஊராட்சி தோறும் தமிழ்வழிக்கல்விக்கூடங்களைத்தொடங்க வேண்டும். அரசு மூடிவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தமிழ்வழிக்கல்விக்கூடங்களை எடுத்துச் சிறப்பாக நடத்த வேண்டும். தமிழ்வழிப்பள்ளிகளைத் தத்து எடுத்துத் தரம் உயர்ந்தனவாக மாற்ற வேண்டும். தாங்கள் நடத்தும் ஆங்கிலக் கல்வி நிலையங்களைத் தமிழ்வழிக்கல்விக்கூடங்களாக மாற்ற வேண்டும். தமிழ்வழிக்கல்விக்கு எதிரானவர்களைப் பொறுப்புகளிலிருந்து நீக்க…
தமிழ் அரிமா, பேராசிரியர் சி.இலக்குவனார் – தினமலர்
தமிழ் அரிமா, பேராசிரியர் சி.இலக்குவனார் – தினமலர் 1909 – நவம்பர் 17 இன்றைய நாகை மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள, வாய்மைமேடு ஊரில் பிறந்தவர், லட்சுமணன். எட்டாம் வகுப்பு படித்த போது, அவரது பெயரை, ‘இலக்குவன்’ எனத், தமிழாசிரியர் சாமி.சிதம்பரனார் மாற்றினார். திருவையாறு அரசர் கல்லுாரியில், புலவர் பட்டம் பெற்றார். 1963 இல், மதுரை தியாகராசர் கல்லுாரியில் பணியாற்றிய போது, தொல்காப்பியத்தை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, விரிவாக ஆய்வு அறிக்கையும் வெளியிட்டார். இதற்காக, சென்னை முதல் குமரி வரை, இவருக்குப் பாராட்டு…
தமிழ்க்காப்புக் கழகத்தின் தமிழ்ப்பூசை – தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” – திருமூலர் தமிழ்க்காப்புக் கழகத்தின் தமிழ்ப்பூசை – தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி மொத்தப்பரிசு உரூ.10,000 /- இறையன்பர்களுக்கும் பிற தமிழன்பர்களுக்கும் வணக்கம். தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பில் “நமக்குத் தேவை தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும்” என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. போட்டிக்கான பரிசுகளாக முதல் பரிசு உரூ. ஐந்தாயிரம் (5,000/-) இரண்டாம் பரிசு உரூ. மூவாயிரம் (3,000/-) மூன்றாம் பரிசு உரூ. இரண்டாயிரம் (2,000/-) வழங்கப்பெறும். பரிசுத்தொகைகளை இலக்குவனார் இலக்கிய…
கணித்தமிழ் எழுத்தரங்கம்
பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கம் 1. கணித்தமிழ் எழுத்தரங்கம் பதின்மூவருக்குப் பரிசுகள் பங்கேற்பாளர்களுக்குக் கணித்தமிழ் ஆர்வலர் விருதிதழ்கள் தமிழ்க்காப்புக்கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து ‘அகரமுதல’ மின்னிதழ் மூலமாகப் பன்னாட்டுப் படைப்பாளர் பல்துறை எழுத்தரங்கத்தை நடத்த உள்ளன. ஒவ்வோர் அறிவியல் துறையிலும் பாடநூல் நோக்கில் கட்டுரைகளையும் சொல்லாக்கங்களையும் (நல்ல) தமிழில் எழுதி அனுப்ப வேண்டும். இவை ‘அகரமுதல’ மின்னிதழ்த்தளத்தில் வெளியிடப் பெறும். கருத்தாளர்கள், தத்தம் கருத்துகளை கட்டுரைகளின் பின்னூட்டாகப் பதிய வேண்டும். அதன்பின் கட்டுரையாளர்கள் ஏதும் திருத்தம் இருப்பின் குறிப்பிட வேண்டும். கட்டுரைகளும்…