நரேந்திரரே! வியவற்க உம்மை! நயவற்க எம் பகையை!

  மக்கள் தொகை அடிப்படையில் மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட பெரிய நாடு இந்தியா. இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவது என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியதுதான்.   அந்தவகையில் நரேந்திரர் தலைமையாளர் பொறுப்பேற்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதில் வியப்பில்லை. ஆனால், தன் வலிமையைச் சிறப்பாக எண்ணி மகிழ்ச்சிக் கடலில் திளைப்பது இடையிலேயே ஆட்சி கவிழவும் வாய்ப்பாகலாம். அவருக்கு இரு முகம் உண்டு என்பது அவரே அறிந்ததுதான். ஒரு முகம் மக்களை ஈர்க்கும் முகம்! மற்றொன்று மக்கள் வெறுக்கும் முகம்! வெறுக்கப்படும் முகத்தை ஈர்க்கும் முகமாக மாற்றாமல் ஒரு…

உங்களைப் போன்றவனின் உள்ளக்குமுறல் – ஈழப்பதிவுகள் : 1-5

 – இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் ஈழத்தில், போராளிகள், சிறார், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளர்கள், பிற உயிரினங்கள் என்ற வேறுபாடின்றி, பன்னூறாயிரவர் கொல்லப்பட்டனர்!  பல நாட்டுப் படை உதவியுடன், எரிகுண்டு, கொத்துக்குண்டு, ஏவுகணை, எனப்பல்வகைப்பட்ட படைக்கலன்களைப் பயன்படுத்தி அங்கே வஞ்சகத்தால் மண்ணின் மக்களும் மண்ணும் அழிக்கப்பட்டனர்!  5 ஆண்டுகள் ஆனாலும் நம் உள்ளம் கனன்றுகொண்டுதான் உள்ளது. என்ற போதும் கொலையாளிகள் தண்டனையின்றி அறவாணர்கள்போல் உலா வருகின்றனர். இப்பொழுதுதான் வாக்குச் சீட்டு ஆயுதத்தின்  மூலம் கொலையாளிகளையும் கூட்டாளிகளையும் துரத்தியடித்துள்ளோம்! 1,76,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மக்களை அழித்தபின்பும் இருக்கின்ற…

பேரினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்

      இறுதிக்கடன் என்பதன் மூலம் நாம் இறந்தவர்க்கு நம் மதிப்பையும் வணக்கத்தையும் செலுத்துகிறோம். இறந்தவர் நினைவைப் போற்றுவதற்கு நாம் நினைவேந்தல் என்கிறோம். இயற்கையாகவோ நோய்வாய்ப்பட்டோ  எதிர்பாரா நேர்ச்சி போன்றவற்றாலோ இறக்கும் பொழுது இவ்வாறு நினைவேந்தலாக நிகழ்த்துவது சரியே!  போராளியாக வீர மரணம் அடையும்  பொழுது நினைவேந்தலை வீர வணக்கம் செலுத்தும் வகையில் கடைப்பிடித்தலே இறந்தவர்க்கு நாம் அளிக்கும் மதிப்பாகும்! கொலை செய்யப்பட்டு இறக்கும் பொழுது,  நினைவேந்தல் நடத்தினாலும் – ‘பல்லுக்குப் பல்’ என்பதுபோல் பழிவாங்குவது தவறு என்றாலும் – பழிவாங்கும் எண்ணமே…

வெற்றி மாலை சூடியவர்களுக்கும் சூடப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்!

  12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வந்துள்ளன. அடுத்து, 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வர உள்ளன. (இடையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் வர உள்ளன.) இவற்றில்  வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அடுத்து வெல்லலாம் என்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்! வெற்றி கண்டு மயங்காதீர்!   பத்தாம் வகுப்பில் முதலிடம் பெறுபவர்கள் அனைவரும் அவ்வாறே பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பெறுகிறார்களா என்றால் இல்லை என்பதே நடைமுறை. இரண்டாண்டில் அவர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் என்ன?  அதே போல், 12…

தமிழுக்கு இழைக்கப்படும் அறக்கேட்டைத் தடுக்க….

  அண்மையில் வெளிவந்த 12 ஆம் வகுப்புத் தேர்வில் முதல்நிலைகளில் மதிப்பெண் எடுத்திருந்தவர்கள் எடுத்துள்ள மொழிப்பாடம் சமற்கிருதம். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவ்வாறுதான் உள்ளது. ஆனால், இவர்கள் பெற்ற சமற்கிருதக் கல்வி இதே வகுப்பில் உள்ள தமிழ்ப் பாடக் கல்விக்கு இணையானது அல்ல. தொடக்க நிலைபோன்ற பாடத்திட்டமும் அதற்கேற்ற எளிய வினாக்களும் கொண்டதே சமசுகிருதப்பாடம். இரு வேறுபட்ட நிலையில் உள்ள மொழிப்பாடங்களின் மதிப்பெண்களை இணையாகப் பார்ப்பதே தவறாகும். சமற்கிருத மொழியைச் செத்த  மொழி என்கிறோம். ஆனால், மத்திய அரசின் முயற்சியால் உலகெங்கும் அம்மொழி  கற்பிக்கப்பட்டு…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி

நம் மொழிக்கு நம் முன்னோர் சூட்டிய பெயர் ‘தமிழ்’ என்பதுதான். ஆனால், சிலர் பிற்பட்ட வழக்கான ‘திராவிடம்’ என்பதிலிருந்து ‘தமிழ்’ வந்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூலான –  உலகின் முதல் நூலான – தமிழர்க்குத் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலான – தொல்காப்பியத்திலேயே ‘தமிழ்’  இடம் பெற்றுள்ளது. இதன் தொன்மையை மறைக்கும் வகையிலேயே ‘தமிழ்’ என்னும் சொல்லைப் பிற்கால வழக்காகக் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘தமிழ்’ என்னும் சொல் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதா என அறியாமையில் கேட்கின்றனர். அதன் மூலம்…

பாவேந்தர் பாரதிதாசன் புகழ்பாடிப் பைந்தமிழ் காப்போம்!

    உலகின் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் போற்றப்பட வேண்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால், தமிழ்நாட்டில்கூட  அவரின் தகைமை பெரும்பான்மையரால் அறியப்படவில்லை. பாரதிதாசன் என்றால் தமிழுணர்வு என அவரை அறிந்தவர்கள் அடையாளம் காண்கின்றனர். ஆனால், அரசியல் அறம், அறிவியல், இசைத்தமிழ்,  இயற்கை போற்றல், சிறுவர் இலக்கியம்,  தொழிலாளர் நலம், பகுத்தறிவு, பெண்ணுரிமை, பொதுவுடைமை, மண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு , எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் பாரதிதாசன். இவரைப்பற்றித் தமிழ்ப்பாட நூல்களிலேயே போதிய கட்டுரைகள் இடம் பெறவில்லை. இவரைப்பற்றி  இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாடநூல்களிலும்…

தமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்!

 தமிழ்நாட்டின் தலைமைப் பதவிகளிலும் தமிழ் அமைப்புகளிலும் தமிழரல்லாதார் அமர்த்தப்படுவதே மரபாக உள்ளது. அந்த வகையில் புதிய தலைமைச் செயலராகத் திரு மோகன் வருகீசு சுங்கத்து இ.ஆ.ப.  (Mohan Verghese Chunkath, I.A.S.) தலைமைச் செயலராக அமர்த்தப்பட்டு பங்குனி 18, 2045 / ஏப்பிரல் 1, 2014 அன்று பொறுப்பேற்றுள்ளார்! தமிழ்நாட்டு மருகரான அவரைத் தமிழ், தமிழர் நலனுக்குப் பாடுபட வாழ்த்துகிறோம்! கல்வியகங்களில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்! தமிழ்நாட்டில் தமிழர்க்கான தமிழர்களின் கோயில்களில் தமிழே வழிபடுமொழியாக இருக்க வேண்டும்! தமிழில் பிற  மொழி…

தமிழ்க்கணினி : பன்னாட்டுக் கருத்தரங்கம்

    திருச்சிராப்பள்ளியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கலை-அறிவியல் கல்லூரியில்(நவலூர் குட்டப்பட்டு) தமிழ்த்துறையின் சார்பாக தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்  இருநாள் நடைபெற்றது. முதல் நாளான 27-03-2014 அன்று காலையில் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர்(பொ.) முனைவர் உண்ணாமலை வரவேற்புரையாற்றினார். பாரதிதாசன்  பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் சுப்பையா தலைமை தாங்கினார்.  பாரதிதாசன் பல்கலைககழகப் பதிவாளர் முனைவர் இராம்கணேசு முன்னிலையுரையாற்றினார். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன் மையப்பொருளுரையாற்றினார்.  தமிழ்நாடு  தேசியச் சட்டப்பள்ளி துணைவேந்தர் முனைவர் ந.முருகவேல் வாழ்த்துரை வழங்கினார். …

நன்கறிந்து எழுதுக!

  இணையப் பயன்பாடு நமக்கு உதவியாகவும் உள்ளது;  தக்கார் பயன்படுத்தும் பொழுது பெருநன்மை விளைவிக்கின்றது. அதுவே அல்லார் கையில் அகப்படும்பொழுது நல்லவற்றைத்  தொலைக்கும் தீய உருவாய் விளங்குகின்றது. இணையம் இதற்குப் பொறுப்பேற்க இயலாது. ஆனால், இதனைப் பயன்படுத்துநர் தங்களுக்குள் கட்டுப்பாடு வைத்துக்  கொண்டு மனம் போன போக்கில் எழுதுவதை நிறுத்த வேண்டும். “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” என்பதை உணராமல்  முற்றும் அறிந்த முனைவராகக் கருதுவது ஏனோ? ஏதேனும் சிறிதளவு அறிந்திருந்தாலும் முற்றும் முழுமையாக அறிந்தது போலும்,  தாம் அறிந்ததே அல்லது அறிந்ததாய் எண்ணி்க்…

தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்

  பேரன்புடையீர், வணக்கம்.  தமிழ்ப்பெயர்ச் சொற்களையும் தமிழ் மேற்கோள்களையும்  அவ்வாறே ஆங்கிலத்தில் குறிப்பிடுகையிலும் தமிழ் இலக்கியங்களை ஆங்கில ஒலி பெயர்ப்பில் குறிப்பிடுகையிலும் தமிழ் எழுத்தொலிகளுக்குப் பொருந்தி வரும்  வரிவடிவங்களே ஏற்கத்தக்கன. இப்பொழுது வெவ்வேறு வகையாகப் பின்பற்றப்படுகின்றன. சிலர்,  ஙகர, ஞகர, நகர, ணகர, னகர வேறுபாடுகளோ லகர, ளகர, ழகர வேறுபாடுகளோ ரகர, றகர வேறுபாடுகளோ தேவையில்லை என ஒரே ஆங்கில வரிவடிவத்தையே அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.   ஒரு மொழியின் எழுத்தொலிகளைப் பிற மொழியின் வரிவடிவங்களில் அதே  ஒலிப்பு முறையில் கொணருவது இயலாத ஒன்றுதான்….

தமிழினத்திற்கு எதிரான வைரமுத்துவின் இரசினிகாந்த்திற்கான திரிபு வேலை

      கவிதை உலகிலும் திரைப்பாடல் உலகிலும் வைரமுத்துவிற்கு எனத் தனி இடம் உள்ளதை மறுப்பதற்கில்லை.  அவருக்குரிய  செல்வாக்கிற்கு அவர் எப்பொழுதோ ஒரு முறை என்றில்லாமல் எப்போதுமே தமிழ்நாட்டின் காசி ஆனந்தனாக வலம் வந்து பாவேந்தர் பரம்பரை போன்ற புதிய பாவலர் பரம்பரையை உருவாக்க இயலும். ஆனால், பணத்திற்காகவும் தன் சொல்லாற்றலைக் காட்டவும், தமிழினத்திற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவரை, தமிழுக்காக  வாழும் தகைமையாளர்போல் காட்டுவது பலரின் வருத்தத்திற்கும் உரியது. தன் தவறான செயலை அவரே பெருமைத்  தொனியில் கோச்சடையான் பட விழாவில்…