(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.6. விழாக்கள்   குழந்தைப் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியன விழாக்கள் நடத்துவதற்கான நிகழ்வுகள் ஆயின.   குழந்தைப் பிறப்பிற்குப் பின் கொண்டாடப்படும் விழா, நெய்யணி முயக்கம் (நூற்பா.147,பொருள்) என அழைக்கப் பட்டது. திருமண நிகழ்ச்சி கரணம் என்று அழைக்கப் பெற்றது. (நூற்பா.142,பொருள்) பிறந்தநாள், பெருமங்கலம் என அழைக்கப் பெற்றது(நூற்பா.91,பொருள்).  அரசர் முடி சூடிய நாள் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டது; மண்ணுமங்கலம் என அழைக்கப்பட்டது(நூற்பா.91,பொருள்). போர்க்களத்தில் வீரர் அடையும் மரணம் சீரும் சிறப்புமாக கொண்டாப்பட்டது.  அவரை மதிப்புச் செய்யும் வகையில்…