இலக்குவனார் பிறந்த நாளும் உலகத்தமிழ் நாளும் : இணைய உரையரங்கம்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.(திருவள்ளுவர், திருக்குறள் 28) கார்த்திகை 03, 2054 * ஞாயிறு காலை 10.00 *19.11.2023 உலகத்தமிழ் நாள் இலக்குவனார் 114 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா இணைய உரையரங்கம் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் கவியரங்கம்: தலைமை: பாவேந்தர் விருதாளர் கவிஞர் கண்மதியன்…
உலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்
உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது
இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் பிறந்த நாளில் அயல்மொழித் திணிப்புகளை அகற்ற உறுதி் கொள்வோம்! கார்த்திகை 1 அல்லது நவம்பர் 17 தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் பிறந்த நாள். இவ்வாண்டு அவரின் நூற்றுஏழாம் பிறந்த நாள். தமிழ்நலப் போராளியாக எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் வாழ்ந்தவர் பேரா.சி.இலக்குவனார். அவர் அறிவுரைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே எழுத்து என்பதற்கு எதிரான போர்க்குரலாகும். ஏதோ, இராசுட்டிரிய சேவா சங்கத்தின் அச்சுப்பதிப்பான பா.ச.க. அரசுதான் இவ்வாறு மொழித்திணிப்பில் ஈடுபடுவதாக இன்றைய தலைமுறையினர் எண்ணக்கூடாது. காங்கிரசு எனப்படும் பேராயக்கட்சியின் தலையாய…