ஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆள்வினைச் செல்வி சசிகலா நடராசன் நட்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கூற வேண்டுமானால், கோப்பெருஞ்சோழ வேந்தரையும் புலவர் பிசிராந்தையாரையும்தான் கூறுவோம். உலக அளவில், புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள் 785) என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இவர்கள். தமிழுலகில் மன்னர் பாரி – புலவர் கபிலர், மன்னர் அதியமான் – புலவர் ஔவை எனப் பலரை நாம் நட்பிற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். மார்க்சு – எஞ்சல்சு நட்பையும் உலகம் போற்றுகின்றது. இருப்பினும் தோழமைக்கு எடுத்துக்காட்டாகத்…